Think before you speak.Read before you think.

head

அன்றாடக் காய்ச்சி:



இயந்திர ஓட்டமாய் தேய்ந்து கொண்டிருக்கும் மனிதனுடைய வாழ்க்கையில் சந்தோசம் , மனநிம்மதி போன்றவை தொலைதூரத்தில் தெரியும் கானல்நீர் போல தேடத்தேட மறைந்து கொண்டிருக்கிறது. சூரியன் பிறப்பெடுத்து, செங்கதிர் கோலோச்சி, இருள்கள் நீங்கி, மலர்கள் மலரும் என்று ஒவ்வொரு நாளும் மனிதன் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து நம்பிக்கையோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறான். அனால் அவன் என்ன செய்வான்? காலம் அவனுக்கு எதிராக வல்லவா சதி செய்கிறது. துரத்திக்கொண்டிருக்கும் வறுமை, கரைந்து கொண்டிருக்கும் ஆரோக்கியம், விண்ணைமுட்டும் விலைவாசி இதற்கு மத்தியில் குடும்பச்சுமை போன்றவை அவனை ஓரிடத்தில் முடக்கி போட அத்தனை முயற்சியையும் மேற்கொள்கிறது. பொருளை ஈட்ட திசை தெரியாமல் ஓடிஓடி ஓடாய் தேய்ந்து கடைசி சொட்டு வியர்வையையும் பாக்கியில்லாமல் உழைத்து, அடுப்படி எரிய அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் இந்த அன்றாடக் காய்ச்சிக்கு கொடுப்பதற்கு யாருமில்லை எனும்போது உள்ளம் பதைபதைக்கிறது.

பசியின் கூறிய நகங்களுக்கு மத்தியில் நெளிந்து கொண்டிருக்கும் அந்த மனிதனுக்கு புசிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தான் பல இரவுகள் கழிந்துகொண்டிருக்கிறது. தக்க சமயத்தில் உதவி புரிய யாருமில்லாமல் திக்கு தெரியாமல் நின்ற நாட்கள் ஏராளம். வெயில் மழை பாராமல் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து உழைத்து இந்த பசியை போக்கவே பத்தவில்லையே என்று அடிக்கடி புலம்புவான். ஆடம்பரம் வேண்டாம்,  மாட மாளிகை வேண்டாம், சொத்து சொகம் வேண்டாம் இந்த பாழாப்போன பசி எடுக்காமல் இருந்தால் என்ன ..என்றெல்லாம் நினைத்து பசியை பழிக்கும் அவன் இதுநாள் வரை ருசி அறிந்திருப்பானோ  என்னவோ என்று யோசிக்கும் அளவுக்கு பரிதவிப்பின் உச்சத்தை தொடுகிறது. அவனது வாழ்க்கை..          
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Popular