Think before you speak.Read before you think.

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

head

எதையும் உவமையோடு சொல்லும் தந்தை பெரியார்

சமூகநீதி, சாதியஒழிப்பு, பெண்உரிமை, பகுத்தறிவு போன்றவைகளுக்காக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய ஒரு  மிகச்சிறந்த ஆளுமைதான் தந்தை பெரியார். உண்மையை எளிமையான உதாரணங்களுடன் சொல்வது சுயமரியாதை சுடர் தந்தை பெரியாருக்கு இணை யாருமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
வரலாற்றில் நடந்த சம்பவம் ஒன்றை நாம் காணலாம்.

பார்ப்பணர்கள் பெரியார் மீது வன்மம் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை..!
ஆனால், ஏன் அவர்களுக்கு இவ்வளவு கோபம் என்பதை பெரியாரே இப்படி எளிமையாக விளக்குவார்..!

"ரயில்ல முதல்ல ஏறுகிறவனுக்கு சீட்டு ஈசியா கிடைக்கும்.அதனால அவன் உட்க்காருவதற்கு பதிலா படுத்துட்டு நல்லா சொகுசா வருவான்..
அடுத்த ஸ்டேஷன்ல கூட்டம் கூடிடும். புதுசா வந்தவன், படுத்துக்கொண்டிருந்த பழைய ஆள எழுந்து உட்காருங்க ன்னு சொல்லுவான்..படுத்து சொகுசா வந்தவரும் வேற வழியில்லாம எழுந்துருவாரு..
ஆனாலும், சொகுசா வந்தவருக்கு, எழுப்பி விட்டவன் மேல ஒரு கோவம் இருந்துட்டே இருக்கும்..!
மேல கை படுது, கால் படுது ன்னு எதாவது சொல்லி எழுப்பிவிட்டவர் மேல கோவத்த காட்டுவாரு..!

ஒரு அரைமணிநேரம் சொகுசா படுத்து வந்தவனுக்கே, அந்த சொகுசு போனவுடனே எழுப்பி விட்டவன் மேல கோவம் வருதே, 2000 வருஷமா சொகுசா இருந்தவனையில்லயா நாம எழுப்பி உக்கார வச்சிருக்கோம்,
அவனுக்கு எவ்வளவு கோவம் இருக்கும்,நம்மள திட்டத்தானே செய்வான்"

என்று இயல்பான நடையில் பெரியார் விவரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.





Share:

பாண்டே சொல்வது பொய்:

பாண்டேசொல்வது பொய்

பாண்டே வெளியிட்டு இருக்கக்கூடிய தற்போதைய வீடியோவில் ட்விட்டர் ஃபேஸ்புக் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக கூடிய செய்திகள் மக்களுடைய கருத்து அல்ல என்பது போல் வெளியிட்டு இருக்கிறார் ஆனால் அது உண்மையா
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள்  சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை  இதனால் இது மக்களுடைய கருத்தாக இருக்காது என்று பாண்டே கூறுகிறார் சமூக வலைதளங்கள் மட்டுமல்ல பெரும்பான்மை மக்கள் தொலைக்காட்சியை கூட பயன்படுத்துவதில்லை  தொலைக்காட்சி  அதிக வீடுகளில் இருக்கலாம் ஆனால் நேரமின்மை வேலைப்பளு இன்னபிற காரணங்களாலும் தொலைக்காட்சியை பார்ப்பதில்லை  அப்படியே பார்த்தாலும் அதில் பெரும்பான்மையான செய்தி ஊடகங்களை பார்ப்பதில்லை என்பது தான் உண்மை  அப்படி இருக்க  ஒரு செய்தி எப்படி கடைக்கோடி மக்களிடம் போய் சேர்கிறது தொலைக்காட்சி பார்க்காத ஒருவனிடம்  செய்தியை கேட்காத ஒருவனிடம் இந்தியாவுடைய அரசியல் மாறுதல்கள் எப்படி போய்ச் சேருகிறது அதுதான் ஊடகங்களின் வலிமை  அதாவது  ஒருவர் செய்தித்தாளிலும் செய்தி ஊடகங்களிலும் செய்தியை பார்க்கிறார் அவர் மூலம் அவர் நண்பர்கள் குடும்பத்தினருக்கு செய்தி போய் சேருகிறது அது மற்றொரு வடிவமாக  அவர்களுடைய சொந்தங்களுக்கு குழு நண்பர்களுக்கு போய் சேர்கிறது இப்படித்தான் ஒருவரைப்பற்றி சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் போய்ச் சேர்கிறது  இதுதான் தற்போது சமூக வலைதளங்களிலும் இருக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு மூலம் நாம் புரிய வைக்கலாம் ஒரு வீட்டில் ஒரு தாய் தந்தை தாத்தா பாட்டி மகன் மகள் என 6 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் அந்த வீட்டில் அப்பா மட்டுமே செய்தித் தொலைக்காட்சி பார்க்கிறார் மகன் மட்டுமே சமூக வலைதளங்கள் பயன்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம் சமூகவலைதளங்களில் வரும் அனைத்தையும்  மகன் குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்வதில்லை ஆனால் #Gobackmodi போன்றவை ட்ரெண்டிங் ஆகிறது அது செய்திகளில் வருகிறது அதை தந்தை பார்க்கிறார் தந்தை மகனிடம் கேட்கிறார் அப்படி என்றால் என்ன என்று அப்பொழுது ஒரு கருத்து உரையாடல் குடும்பத்தில் நடைபெறுகிறது அந்த கருத்து தாத்தா பாட்டி அப்பா அம்மா மகள் ஆகிய அனைவருக்கும்  அந்தச் செய்தி போய்ச் சேர்கிறது அந்த செய்தியை அவர்கள் அவர்களுடைய நண்பர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கிறார் இப்படித்தான் ஒரு செய்தி ஒன்றிலிருந்து ஆறாகி ஆறு 60 ஆகிறது இதுகூட தெரியாதவரா பாண்டே என்று எண்ணத் தோன்றுகிறது செய்தித்தாள்கள் செய்தி ஊடகங்கள் சமூக வலைதளங்கள் இவை எதையுமே படிக்காத மக்களுக்கு செய்திகள் எப்படி போய்ச் சேருகிறது அதை ஏதோ ஒரு வழியில் கொண்டு போய் சேர்ப்பதில் ஊடகங்களுக்கு தான் பெரும் பங்கு இருக்கிறது இதில் முக்கிய பங்காற்றுவதாக சமூக வலைதளங்கள் தற்பொழுது இருக்கிறது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை
Share:

வருகின்ற லோக்சபா தேர்தலில் களமிறங்குகிறார் பிரகாஷ்ராஜ்:

வருகின்ற லோக்சபா தேர்தலில் களமிறங்குகிறார் பிரகாஷ்ராஜ்: 

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஜனவரி 1 ம் தேதி அதிரடியாக அறிவித்துள்ளார். அவர் முதற்கட்டமாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். எந்த கட்சியுடனும்  வைக்காமல் சுயேட்சையாக தேர்தலை சந்திக்க உள்ளார். கர்நாடகாவில் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் நன்றாக யோசித்து முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். இன்றைய மத்திய அரயை எதிர்த்து மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். 

பல மேடைகளில் பி.ஜே.பி அரசை எதிர்த்து கருத்து சுதந்திரத்திற்கு எதிரான போக்கை கண்டித்து மக்களுக்கான குரலாக ஒலித்துள்ளார். என்னை இயங்கவிடாமல்  கோழைகள் தடுக்கிறார்கள் என்று சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். இரண்டு தேசிய கட்சிகளும் மக்களுக்கான கட்சியாக இயங்கவில்லை அதனால் காங்கிரஸிடமும் கூட்டணி இல்லை மேலும் தனித்து தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

  • எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பி.ஜே.பி. பின்புலமாக செயல்பட்டிருக்க கூடும் மேலும் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டு மதவெறி அரசியலை முன்னிறுத்துகிறது என்றும் கடுமையான குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
  • # citizenvoice in parliment என்ற hastag ஐ பயன்படுத்தி மதவெறி அரசியலை கண்டித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவருடைய நெருங்கிய நண்பரான கௌரி லங்கேஷ் கொலை அவரை மிக பெரிய துயரத்திற்கு இழுத்து சென்றிருக்கிறது. அதனாலோ என்னவோ நடிகராகவும் சமூக ஆர்வலராகவும் மட்டுமே  தன்னை வெளிப்படுத்தி கொண்டிருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் திடீரென்று அரசியலில் அதிரடியாக வெளிப்பட்டிருகிறார்.  
Share:

கத்தார் வீரர்கள் மீது செருப்பு வீச்சு:வீடியோ இணைப்பு உள்ளே


ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தற்போது நடைபெற்று வருகிறது இதன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் கத்தார் - ஐக்கிய அரபு அமீரகம் மோதும் சூழல் ஏற்பட்டது இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் மோதுவது போல ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது ஐக்கிய அரபு அமீரகம் சவுதி உட்பட பல அரபு நாடுகள் கத்தார் மீது பொருளாதார மற்றும் இன்னபிற தடைகளை விதித்து இருக்கிறது இதன் காரணமாகவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கத்தார்கும் இடையே பனிப்போர் போல சூழல் நிலவி வருகிறது இச்சூழ்நிலையில் கத்தார் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையான இந்த கால்பந்து போட்டி பெரும் எதிர்ப்பார்ப்பையும் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.  தடையின் காரணமாக கத்தார் நாட்டு ரசிகர்கள்  இந்தப் போட்டிகளை காண வாய்ப்பு இல்லாமல் போனது எனினும் ஓமன் மற்றும் இதர உலக நாடு ரசிகர்கள் கத்தாருக்கு ஆதரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


 ஆனால் அபுதாபி football கவுன்சில் என்னும் அமைப்பு  கத்தார் - ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான போட்டியின் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி ஐக்கிய அரபு அமீரக ரசிகர்களுக்கு மட்டுமே வழங்கியிருந்தது இதனால் அரங்கம் முழுவதும் ஐக்கிய அரபு அமீரக ரசிகர்களே இடம்பெற்றதாக கூறப்படுகிறது இந்த போட்டியில் கத்தார் அணி 4-0 என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வீழ்த்தியது இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்நாட்டின் ரசிகர்கள் கத்தார் அணியினர் மீது செருப்பு வாட்டர் பாட்டில் போன்றவற்றை வீசி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர் இதனால் மைதானத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது எனினும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது இந்தச் செயல் அந்நாட்டு ரசிகர்கள் மீது உலக அரங்கில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இதில் கத்தார் வெற்றி பெற்றதால் ஜப்பான் அணியை இறுதிச்சுற்றில் சந்தித்திருக்கிறது ஜப்பான் அணி ஏற்கனவே ஆசிய தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஈரானை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
Share:

குற்றாலத்தில் தொட.ரும் மர்ம மரணங்கள்

குற்றாலத்தில் தொட.ரும் மர்ம மரணங்கள்-பதற்றத்தில் சுற்றுலா பயணிகள்.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே நன்னகரம் என்ற பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பெண் பிணமும், ஐந்தருவி பகுதியில் ஆண் பிணம் தூக்கில் தொங்கிய நிலையிலும் மீட்கப்பட்டன.
நன்னகரம் பகுதியில் எரிந்த நிலையில் பெண் பிணம் கிடப்பதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் விரைந்து சென்றனர். நன்னகரம் தேவேந்திரகுல சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட நொண்டி மாடசாமி கோவில் அருகே மல்லாந்த நிலையில் ஒரு பெண் தீ வைத்து எரிந்த நிலையில் கிடந்தார். அங்கு கிடந்த மண்ணெண்ணை கேன் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்டவைகளை போலீஸார் கைப்பற்றினர்.இந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரும் கொலை செய்து கொண்டு வந்து போட்டு எரித்து சென்றார்களா என்பது தெரியவில்லை. உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு தென்காசி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக குற்றாலம் போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து சென்ற அவர்கள் அழுகிய நிலையில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த உடலை கைப்பற்றினர்.விசாரணையில், அவர் திருநெல்வேலி-சங்கரன் கோவில் சாலையில் உள்ள அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த சங்கு என்பதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் கடந்த 17ஆம் தேதி பாவூர்சத்திரம் அருகே சாலையில் விழுந்து காயமடைந்து பின்னர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.ஒரே நாளில் அடையாளம் தெரியாத பெண் எரிந்த நிலையிலும், காட்டுப்பகுதியில் ஆண் பிணமும் கண்டெடுக்கபட்டது குற்றாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share:

மீண்டும் இந்திரா.......

மீண்டும் இந்திரா.......

நீண்ட நாட்களாக பிரியங்கா காந்திக்கு அரசியல் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி அவருக்கு உத்தரபிரதேச கிழக்கு மாகாண பொறுப்பாளர் பதவியை வழங்கியுள்ளது உத்தரப்பிரதேச கிழக்கு மாகாண பகுதி என்பது பாஜக மிக மிக வலிமையாக இருக்க கூடிய ஒரு பகுதியாகும் அத்தகையோர் பகுதியில் பிரியங்கா காந்தியை பொறுப்பாளராக நியமித்திருப்பது அவர் வலிமையான ஆளுமை என எதிர்பார்க்கப்பட்டு வழங்கப்பட்டது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 1972 ஜனவரி 12-ஆம் தேதி  சோனியாவுக்கும் ராஜீவ்காந்திக்கும் மகளாக பிறந்த பிரியங்கா காந்தி இந்திரா காந்தியின் தோற்றத்தைப் போலவே அமையப் பெற்று உள்ளார். அவர்  குணங்களும் இந்திராவை போல துணிச்சலாக வலிமையாக இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கருதுகிறார்கள். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் பஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்து களம் இறங்குகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் இதுவரை இடம்பெறவில்லை காங்கிரஸ் அங்கு தனித்து விடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதும் நிலையில் பிரியங்காவின் இந்த வருகை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே எட்டு பத்து சதவீத வாக்குகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் மேலும் வாக்குகளை பெறக்கூடியதாக இந்த முடிவு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆளும் பாஜகவுக்கு மட்டுமல்லாமல் எஸ்.பி, பி.எஸ்.பி ஆகிய கட்சிகளுக்கும் தன் பலத்தை நிரூபிக்க எடுக்கப்பட்ட முடிவாகவே தெரிகிறது இருப்பினும் சமீப காலமாக காங்கிரஸ் கட்சியை உத்தரபிரதேசத்தில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது அதில் இருந்து காங்கிரஸ் கட்சியை மாற்றி அமைத்து புத்துணர்ச்சி பாய்ச்சும் தலைவராகவே பிரியங்காவை காங்கிரஸ்காரர்கள் பார்க்கிறார்கள். பிரியங்கா காங்கிரஸின் உத்திரப்பிரதேச நீண்ட நாள் அரசியல் திட்டத்திற்காக பயன்படுத்த படுவார் என்று கருதப்படுகிறது எனினும் காங்கிரஸ் பெறக்கூடிய இந்த வாக்குகள் பாஜகவின் வாக்குகளைப் பிரிக்குமா? அல்லது மாநில கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்குமா? என்று தேர்தலுக்கு பிறகு தான் நமக்கு தெரியவரும். இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் எஸ்பி, பிஎஸ்பி ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டால் பாஜக 18 இடங்கள் மட்டுமே பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுவே எஸ்பி பிஎஸ்பி மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்பட்டால் 5 இடங்கள் மட்டுமே பாஜகவுக்கு கிடைக்கும் என்று அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதனால் இதற்குப் பின்பும் கூட மாநில கட்சிகளோடு இணைந்து காங்கிரஸ் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனினும்  பிரியங்காவின் இந்த வருகை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஒரு புத்துணர்ச்சி அளிப்பதாகவே தெரிகிறது.
Share:

ப.ஜா.க வின் அடுத்த பிரதம வேட்பாளர் யார்? சொந்த கட்சியில் வலுப்பெறும் மோடி எதிர்ப்பு

 ப.ஜா.க கட்சியின் உள்ளேயே மோடி எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. 
இதற்கு முக்கிய காரணம் மோடி கொடுத்த வாக்குறுதி 15 லட்சம், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, மோடியின் வெளிநாட்டு பயணம், நீட் தேர்வு இதனால்தான் மக்களின் வெறுப்புணர்வை மோடி அரசு சம்பாதித்தது  என்று குற்றம் சாட்டுகின்றனர். மோடி பதவியேற்ற நாளிலிருந்து தம் சொந்த கட்சியில் தமக்கு யார் யாரெல்லாம் எதிர்காலத்தில் இடையூறாக இருப்பார்களோ அவர்களை ஓரம்கட்டினார். இவரால் ஓரம்கட்டப்பட்டவர்கள் தான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நிதின் கட்காரி போன்றவர்கள். இன்று அவர்கள் மோடிக்கு மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டார்கள். 
2014 ல் ப.ஜா.க ஆட்சி அமைத்த மூன்றாவது ஆண்டிலிருந்தே மோடி எதிர்ப்பு ஆரம்பித்துவிட்டது. தற்போது மூத்த தலைவர்களில் ஒருவரான நிதின் கட்காரியை பிரதம வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ப.ஜா.க விற்கு உள்ளேயே குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன.

 RSS ன் தலைவரான மோகன் பகவத்திற்கும் மோடிக்கும் மிகப்பெரிய பனிப்போர் நடைபெற்று கொண்டிருகிறது. இதனால் அவரும்  மோடிக்கு எதிரான மனநிலையிலதான் உள்ளார். இந்நிலையில் ப.ஜா.க வின் கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய சிவசேனா மோடியை பிரதம வேட்பாளராக அறிவித்தால் கூட்டணியை விட்டு விலகுவதாக ப.ஜா.க விற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. மேலும் உத்தரபிரதேச முதல்வராக இருக்கக்கூடிய யோகி ஆதித்யநாத்தை பிரதம வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த தேர்தலில் மோடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நான் கூட்டணியில் இருக்கமாட்டேன் என்று விலகிய நிதிஷ் குமார் தற்போது ப.ஜா.க வில் இருந்தாலும் அவர் தன்னை பிரதம வேட்பாளராக முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருக்கத்தான் செய்கிறது. இதனால் ப.ஜா.க வால் இம்முறை மோடி முன்னிலைப்படுத்தபடுவது மிகப்பெரிய கேள்வி குறியாகவே இருக்கிறது.

தற்போது ப.ஜா.க விற்கு உள்ளேயே 3 பிரதம வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இந்த முறை மோடி வருவது  மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதை மோடி சமாளிப்பாரா?


Share:

இந்து மதஉணர்வுகளை புண்படுத்துவதுதான் நோக்கமா?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக ப.ஜா.க. பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. உயர்சாதி இந்துக்களுடைய வாக்குகளைக் பெறுவதற்கு அவசர அவசரமாக 10% இடஓதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் அவர்களால் கடைவிரிக்க முடியவில்லை என்பதால் ராமர் அரசியல்,பிள்ளையார் அரசியல்,ரஜினி அரசியல் என்று பல அரசியல் செய்து பார்த்தது. ஒன்னும் பலிக்கவில்லை என்பதால் எதையாவது சொல்லி மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மத்தியில் மதத்தை வைத்து அரசியல் செய்ததை போல மாநிலத்திலும் மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது.அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் லயோலா காலேஜில்  நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சி விருது வழங்கும் விழாவில் இடம்பெற்ற ஓவியங்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை பரப்பி வருகிறது.மோடி அரசின் சாதனை,10% இடஓதுக்கீடு, ராஃபேல் ஊழல்,கார்ப்பரேட் ஊடுருவல் போன்ற பல்வேறு ஓவியங்கள் அங்கு இடம்பெற்றது.
மேலும் இந்துக்களின் மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் அங்கு சில ஓவியங்கள் இருந்தன. அதற்கு லயோலா காலேஜ் நிர்வாகமும் மன்னிப்பு கேட்டது.

இங்கு அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் மதஉணர்வுகளை புண்படுத்துவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது அதில் ஏந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் வர்ணாசிரம கொள்கையின்படி மனிதர்களிடத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தி சாதிய பிளவுகளை உண்டுபண்ணி அதில் அரசியல் ஆதாயம் அடையக்கூடியவர்கள் மதத்தின் பெயரால் ஒரு விஷயத்தை முன்னெடுக்கும் போது சாதாரண மக்களாகிய நாம் சரியான புரிதலோடு அணுகுவதுதான்  சிறந்ததாக இருக்கமுடியும். மதத்தின் பெயரால் எத்தனையோ கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றிருக்கிறது. மதத்தின் பெயரால் கோவில் கருவறையில் 8 வயது சிறுமிக்கு  நடந்த அந்த கொடூரம். சாதிய ஆதிக்கத்தால் நடந்த எத்தனையோ ஆணவ கொலைகள் இப்படி மதத்தின் பெயரால் பல துயரங்கள் அரங்கேறியுள்ளது. மதத்தை முன்னிலைப்படுத்தி வர்ணத்தின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் கடவுள்கள் நமக்கு தேவையா? அந்த ஓவியங்களும் சித்திரங்களும் இம்மாதிரியான கடவுள்களை தான் குறிக்கும் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுளோம்.   
Share:

நடிகர் அஜீத் ரசிகர்கள் பா.ஜ.க வில் சேர்கிறார்களா?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க நடிகர்களை வைத்து காய்நகர்த்தல் வேலையை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அஜீத் ரசிகர்கள் மோடியின் ரசிகர்களாக மாறிவிட்டார்கள் என்றும் மோடியின் திட்டத்தை அஜீத் ரசிகர்கள் தான் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று   தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சாவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் அஜீத் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

சினிமாதான் எனது தொழிலாக கொண்டுள்ளேன். நேரடியாகவோ மறைமுகமாகவோ நன் அரசியலுக்கு வரமாட்டேன்.என்பதை நன் ஏற்கெனவே கூறியுள்ளேன். என்னுடைய பெயரையோ படத்தையோ வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று அதிரடியாக கூறியுள்ளார். நான் நடிக்கும் படத்தில் கூட அரசியல் சாயம் வந்துவிட கூடாது என்று கவனமாக இருக்கக்கூடியவன் நான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். என்னையும் என் ரசிகர்களையும் தொடர்புபடுத்தி யாரும் இங்கு அரசியல் செய்ய வேண்டாம். எனக்கு அரசியலுக்கு வருவதற்கு துளி அளவு கூட விருப்பம் இல்லை. சாதாரண மனிதனாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு. எனக்கும் அரசியல் பற்றி தனிப்பட்ட கருது உண்டு அதை நான் யாரிடத்திலும் திணிப்பதில்லை அதேபோல் என்னிடத்திலும் யாரும் திணிக்கவேண்டாம். அதற்கு தான் சில வருடங்களுக்கு முன்பு ரசிகர் மன்றத்தையே கலைக்க சொன்னேன். நான் என் ரசிகர்களிடத்தி எதிர்பார்ப்பதெல்லாம் அன்பை மட்டுமே. வாழு வாழவிடு என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நடந்த ஐந்து மாநில தேர்தல் முடிவு பா.ஜ.க விற்கு மிக பெரிய தோல்வியை தந்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த தோல்வி தொடரக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அது ஆன்மீக அரசியல் என்று சொல்லி ரஜினியை வைத்து அரசியல் செய்ததாக இருந்தாலும் சரி .பின்பு ராமர் அரசியல் என்று கடவுளை வைத்து அரசியல் செய்ததாக இருந்தாலும் சரி. தற்போது 10% இடஓதுக்கீடு என்று உயர்சாதி இந்துக்களை கவர்வதற்காக இடஓதுக்கீடை வைத்து அரசியல் செய்கிறது.அதற்கு பின் நடிகர் அஜீத் வைத்து அரசியல் செய்கிறது. 

இது ஒருபக்கம் இருக்க பா.ஜ.க வை வீழ்த்துவதற்கு 23 கட்சிகள் பங்கேற்ற மிகப்பெரிய எதிர்கட்சிகள் கூட்டம் கொல்கத்தாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. வருகின்ற தேர்தல் பா.ஜ.க விற்கு மிக பெரிய சவுக்கடியாக விழும் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Share:

ஸ்டாலின் பேச்சால் கடுப்பான h.ராஜாவும்,தமிழிசையும்

நேன்று நடந்த பிரம்மாண்டமான எதிர்கட்சிகள் கூட்டம் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில்  நடைபெற்றது.இதில் அரவிந் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு,  குமாரசாமி,தேவகோடா,அகிலேஷ் யாதவ் மேலும் 23 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு இவ்வாறு உரையாற்றினார்.வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் 2 வது சுதந்திரப்போர். எதிர்கட்சிகள் ஓரணியில் சேர்ந்து பா.ஜ.க வை வீழ்த்த கடமைப்பட்டுள்ளோம்.மோடி அரசு 15 லட்சம் ஒவ்வொரு தனிநபர் கணக்கிலும் போடுவதாக பொய்யான வாக்குருதிகளை மட்டுமே கொடுத்துள்ளது. மோடி தரையில் இருக்கிறாரா? ஆகாயத்தில் இருக்கிறாரா? என்று கலாய்துள்ளார். மேலும் இரும்புப் பெண்மணியான மம்தாவின் அழைப்பை ஏற்று வந்திருக்கிறேன். மோடியும்,அமித்ஷாவும் மேற்கு வங்கத்திற்கு வரவே பயப்படுகிறார்கள்.என்றும் அவருடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக h.ராஜா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.1976 ல் ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று சொல்லி பொய்யான வாக்குருதியை அளித்தவர் ஸ்டாலின் என்றும் கார்பரேட்டுகளின் கைகூலி ஸ்டாலின் என்றும் தமிழகத்தில் தி.மு.க வை அகற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழிசை இவ்வாறு கூறியுள்ளார். எதிர்கட்சிகளின் கூட்டணி கருவிலேயே கலைந்துவிடும். மேலும் கொல்கத்தாவில் கூடிய அனைத்து கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு மோடி வருகைக்கு பின் பா.ஜ.க நல்ல கூட்டணி அமைக்கும் என கூறியுள்ளார்.மேலும் நல்ல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Share:

#10 yearchallenge பேஸ்புக்கால் வரும் ஆபத்து.

#10 yearchallenge எதை நோக்கி நகர்த்துகிறது ஃபேஸ்புக்..

சமீபமாக #10yearchallenge என்ற 10 வருட changes என்று ஃபேஸ்புக்கில் எல்லோராலும் தங்களது போட்டோக்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் வரும் பாதிப்புகளை பற்றி அவர்கள் யோசிப்பது கூட இல்லை. இதனால் informations திருடு போக வாய்ப்புகள் உள்ளது. 10 வருட முன்பு உள்ள போட்டோக்களை பதிவிடுவதன் மூலம் facebook நம்மளுடைய போட்டோக்களை codings ஆகவோ HTML தரவுகளாக சேமிக்கப்படுகிறது. facebook recognising மூலம் தற்போது உள்ள போட்டோவையும் 10 வருட முன்பு உள்ள போட்டோவையும் scan செய்து  10 வருடம் கழித்து உள்ள போட்டோக்களை உருவாக்குகிறது. அதில் உள்ள சிறந்த போட்டோக்களை சந்தையில் விற்பனைக்காக பயன்படுத்தப்படுகிறது. என்று சாப்ட்வேர் துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். மிக முக்கியமாக இதனால் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

தொழில்நுட்பம் வளர வளர அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்கிறது. சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன செய்தி பதிவிடலாம் என்று நினைக்கிறன். அவர் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் கொண்டவர். ஒரு நாள் அவருக்கு ஒரு பெண் friend requiest கொடுத்தார். இரண்டு நபர்களும் நட்பு ரீதியாக தங்களுடைய விஷயங்களை பரிமாறிக்கொண்டார்கள்.  ஒரு மாத காலம் இருவரும் எந்த கெட்ட நோக்கமும் இல்லாமல் பேசிக்கொண்டு
இருந்தார்கள். ஒரு நாள் இருவரும் சந்திக்கலாம் என பேசிக் கொண்டனர். நாளை இந்த இடத்தில் சந்திப்பதாக அவர் கூறினார். அந்த நேரத்தில் அவருக்கு facebook காண்டம் சம்பந்தமான விளம்பரங்கள் அவருடைய பக்கத்தில் வருவதை கண்டு அதிர்ச்சியுற்றார்.எந்த அளவுக்கு data களை சேகரித்து விளம்பரங்கள் facebook ஆல் பரிந்துரைக்கப்படுகிறது என்று சொன்னார். இதே போன்று facebook ல் யாரிடமாவது நீங்கள் சண்டையிட்டுக்கொண்டால் கத்தி,கம்பு போன்றவை facebook ஆல் பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு facebook நம்மளுடைய அங்க அசைவுகளை கூட கண்காணித்து கொண்டிருக்கிறது.அதனால் நாம் நம்முடைய personnel details ஐ facebook ல் பதிவேற்றம் செய்யாமல் இருப்பது நல்லது.
Share:

மோடியா ? ராகுலா?:

மோடியா? ராகுலா?: 
இன்னும் நான்கு மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரஇருக்கிறது. மோடியா? ராகுலா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் கடுமையான பேசுபொருளாக மாறி விவாதம் போய்க்கொண்டிருக்கும் நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக முன்மொழிந்து விட்டார்.அனால் ராகுலை பிரதம வேட்பாளராக ஏற்க பல்வேறு மாநில கட்சிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. பா.ஜ.க. வரக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.ஆனால் ராகுலை ஏற்கும் விஷயத்தில் முரண்பட்டு போகிறார்கள். 

கடந்த நான்கரை ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி எப்படி இருந்தது என்பது நடந்த ஐந்து மாநில தேர்தலில் பிரதிபலித்ததை நாம் எல்லோரும் அறிவோம். முக்கியமாக பணமதிப்பிழப்பு,ஜி.எஸ்.டி, நீட் தேர்வு போன்றவை தான் பா.ஜ.க தோல்வியடைய காரணமாக இருந்திருக்கும்.

ப.ஜ.க.விற்கு எதிரான தேசிய எதிர்கட்சிகள் கூட்டம் நாளை கொல்கத்தாவில்  நடைபெறவுள்ளது. அது பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய சவுக்கடியாக அமையும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ், காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி இடதுசாரிகள் போன்ற ஒட்டு மொத்த பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் கூட உள்ளனர்.காங்கிரஸ் சார்பாக மல்லிகார்ஜுன் கார்கே, தமிழகத்தில் தி.மு.க சார்பாக ஸ்டாலின் அவர்கள் மேலும் அகிலேஷ் யாதவ்,மாயாவதி போன்றோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ராகுலை ஏற்க பல தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும்  பி.ஜே.பி.
யை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தால் ஒன்றாக சேர்ந்து ராகுலை முன்மொழிவார்களா? அல்லது மூன்றாவது கூட்டனி அமையுமா? என்று பொருத்திருந்து பார்க்கலாம். 
Share:

12 கோடி மக்கள் கூடும் கும்பமேளா

கும்பமேளா:

உலகிலேயே அதிகமான மக்கள் கூடும் திருவிழா வான கும்பமேளா ஜனவரி 5 முதல்  மார்ச் 4 வரை நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு நடக்கும் இந்த கும்பமேளா கடந்த 2013 ம் ஆண்டு மட்டும் 12 கோடி மக்கள் கூடியுள்ளனர். இவ்வாண்டு 15 கோடி மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருவாரியான இந்துக்கள் சங்கமிக்கும் இந்த கும்பமேளா ஹரித்துவார், நாசிக், உஜ்ஜைன் மற்றும் 

அலகாபாத் போன்ற நான்கு இடங்களில் நடைபெறும்.ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுகு நடைபெறும் கும்பமேளா அரை கும்பமேளா என்றும் ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறும் கும்பமேளா முழு கும்பமேளா என்றும்  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பமேளா மஹா கும்பமேளா என்றும் சொல்வார்கள். விண்ணுலகத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் சாகாவரம் தரும் அமிர்தம் எடுத்துக்கொண்டிருக்கும் போது அதை அசுரர்கள் திருடிவிட்டார்கள் அதை 12 நாட்கள் போராடி தேவர்கள் மீட்டர்கள் அதனால் 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும்  கும்பமேளா பிரசித்திபெற்றது என்றும் திருமாலின் வாகனமான கருடன் ஆமிர்தத்தை சுமந்து செல்லும்போது சில துளிகள் நான்கு  இடங்களில் விழுந்ததாகவும் கும்பமேளா அன்று அங்கு நீராடினால் உடலும் உள்ளமும் பாவமீட்சி அடையும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. 


இவ்வாண்டு நடைபெற்று கொண்டிருக்கும் கும்பமேளாவிற்கு 4200 கோடி ருபாய் செலவுசெய்ந்திருக்கிறார்கள். இதில் பாதி தொகையை மத்தியஅரசு ஏற்குமாறு கேட்டுள்ளனர். இது கடந்த 2013-ம் ஆண்டு செலவைவிட மூன்று மடங்கு கூடுதல் ஆகும். மேலும் 800 சிறப்பு இரயில்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 


Share:

கார்த்தி-க்கு ஒரு கோடி கொடுத்த சூர்யா

கார்த்தி-க்கு ஒரு கோடி கொடுத்த சூர்யா :

விவசாயத்தை மையமாக வைத்து கார்த்தி நடித்த கடைகுட்டிசிங்கம் படம் கடையநல்லூர்,வடகரை சுற்று வட்டாரப்பகுதியில் படம் எடுக்கப்பட்டது. அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதை தொடர்ந்து நடிகர் கார்த்திகுள் ஏதோ மாற்றம் ஏற்பட்டதாக விவசாயிகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு உழவர் அறக்கட்டளை என்ற அமைப்பு ஆரம்பித்து இருக்கிறார். அதை வரவேற்கும் விதமாக அவரது அண்ணன் நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் கொடுத்து துவக்கி வைத்துள்ளார். மேலும் உழவன் விருதுகள் கொடுக்கவும் முடிவு எடுத்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் லாபகரமாக விவசாயம் செய்த 5 நபர்களை தேர்வு செய்து ஜீ தொலைக்காட்சி உதவியுடன் தலா ஒரு லட்சம் ருபாய் பரிசு வழங்கியுள்ளார்.

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான்- பாரதி. அனால் இன்றோ பசியால் மட்டும் இறக்கக்கூடிய மக்களின் பட்டியலில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது.விவசாயம் அழிந்து வரக்கூடிய இந்த சூழ்நிலையில் விவசாயத்தை பாதுகாக்க  கார்த்தி முன்னெடுத்திருக்கிற இந்த செயல் வரவேற்புக்குரியது. அவருடைய முன்னெடுப்புகள் சிறந்ததாக அமைய நாம்  வாழ்த்தி வரவேற்கிறோம். 
Share:

தொழிலாளியை தெருவில் நாய் போல் நடக்க வைத்த முதலாளி...!!!!

தொழிலாளியை  தெருவில் நாய் போல் நடக்க வைத்த முதலாளி...!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் சீனாவில் நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. பெருவாரியான மக்கள்தொகை கொண்ட பொருளாதாரத்தில் முன்னேறிய  நாகரிகத்தில் பழமைவாய்ந்த சீன தேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது ஆச்சரியத்தை தருகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு முதலாளியும் தன் நிறுவனத்தை முன்னேற்றி செல்ல இலக்கு நிர்ணயித்து பயணிப்பது என்பது  வழக்கம். இதில் பல நிறுவனகள் போட்டிக்காக எட்ட முடியாது என அறிந்தும் இலக்கு நிர்ணயிக்கம் செய்து  இப்படி எட்ட முடியாத  பல இலக்குகளை தொழிலாலர்கள் மீது திணித்து குறிபிட்ட கால அளவுக்குள் அதை முடிக்க வேண்டும் என தொழிலாளிகளை கட்டளையிடும். பெரும்பாலும் இப்படி பட்ட எட்ட முடியாத இலக்குகளை எவ்வளவு முயற்சி செய்தும் எட்ட முடியமாலே போகும். இதனை காரணமாக வைத்து  நிறுவனங்கள் தொழில்லாளர்களை 'உங்களுக்கு வேலை தெரியவில்லை, திறன் இல்லை, முயற்சி செய்யவில்லை, என்றல்லாம் பொய்யுரைத்து வஞ்சிக்கும். இதனா‌ல் அவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேர விடாமல் தடுக்க படுவார்கள்.  இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் சீன நிறுவனம் இலக்குகளை அடையாத தன் தொழிலாலர்களை நாய் போல் தெருவில் தவழ்ந்து வர செய்திருக்கிறது. முன்னால் ஒருவர் நிறுவனத்தின் கொடியை தூக்கி செல்ல பின்னால் இவர்கள் நான்கு கால்களால் தவழ்ந்து வந்திருக்கின்றார்கள். காவல் துறை வரும் வரை இந்நிகழ்வு தொடர்ந்து நடந்திருக்கிறது. இது சமுக வலை தளங்களில் வைரலான பிறகு அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க  பட்டுள்ளது. கடத்த ஆண்டும் இதே போல சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி ஆண் தொழிலாலர்களை வரிசையாக நிக்க வைத்து பெண் தொழிலாலியை கொண்டு கன்னத்தில் அறைய வைத்த வீடியோ வைரலானது குருபிடதக்கது.கம்யூனிச நாடுகளில் கூட இவ்வாறான முதலாளிகளின்ஆதிக்கம் இருக்கிறது. 



Share:

ஓட்டு அரசியல் 10% இடஓதுக்கீடு:

ஓட்டு அரசியல் 10% இடஓதுக்கீடு:

 உயர்சாதி வகுப்பை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10% இடஓதுக்கீடு என்று சமீபத்தில் மாநிலங்களவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இது சமூக வலைதளங்களில் கடுமையான விவாதமாக மாறியுள்ளது.பொதுவாக அரசியல் சாசன சட்டப்படி  இடஓதுக்கீடு யாருக்கு பொருந்தும் என்றால் சாதிய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட  கல்வி மறுக்கப்பட்ட, அதிகாரத்தால் பின்தங்கியவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படுவது தான் இடஓதுக்கீடு. என்பது அரசியல் சாசன விதி. அனால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் என்பது அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது. இது உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகிவிடும் என தெரிந்தும்  இந்த சட்டத்தை  அவசரமாக நிறைவேற்ற காரணம் என்ன என்று பார்த்தால் கடந்த 5 மாநில தேர்தல் முடிவு பா.ஜ.க.விற்கு  மிகப்பெரிய பின்னடைவை தந்திருக்கிறது. அதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள  உயர்சாதி வகுப்பில் உள்ளவர்களுடைய வாக்குகளை கவர்வதற்காக இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. என்று திராவிட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்றால் அவர்களுக்கு தேவையான கடன் உதவி செய்யலாம். அதைவிட்டுவிட்டு இடஓதுக்கீடு என்று சொல்வது வத்தலகுண்டு போக வழி கேட்டல் கொட்டப்பாக்கு எட்டணா-னு சொன்னானா என்பது போல இருக்கிறது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மேலும் மேலும் அதிகாரம் கொடுப்பது என்பது எந்த வகையில் நியாயம். 

மேடும் பள்ளமும் இருந்தால் அதை சரிப்படுத்துவதற்கு மேட்டிலிருந்து மண்ணை வெட்டி பள்ளத்தில் போடவேண்டும். இல்லாவிட்டால் பள்ளத்தில் மண்ணை போட்டு மேடு வரை உயர்த்த வேண்டும்.இதுதான் நியாயமாக இருக்கும். அதைவிட்டுவிட்டு இரண்டு பக்கமும் சரிசமமாக மண்ணை போட்டால் மேடு மேடாகத்தான் இருக்கும் பள்ளம் பள்ளமாகதான் இருக்கும் என்று திராவிட கழகதில் உள்ள அருள்மொழி கூறியுள்ளார். இதில் இடதுசாரி காங்கிரசும் எந்த சலனமும் இல்லாமல் மத்திய அரசுக்கு துணை போவது எதை காட்டுகிறது என்றால் சாதிய ஆதிக்கம் காங்கிரசிலும் வேரூன்றி இருப்பது பட்டவெளிச்சமாக தெரிகிறது. 
மேலும் பொருளாதாரத்தில் ஆண்டு வருமானம் 8ட்சம் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த இடஓதுக்கீடு பொருந்தும் என்று சொல்கிறது. ஆண்டு வருமானம் 8 லட்சம் என்றால் மாதம் சராசரியாக 65 ஆயிரம் வாங்குபவர்கள் இவர்கள் பார்வையில் ஏழையாம்.  அப்படி பார்த்தால் இந்தியாவில் 90% மக்கள் ஏழைகளாகதான் இருக்கிறார்கள். ஆக அடிப்படையில் இவர்கள் சொல்லும் சட்டம் ஒரு வாதத்திற்காக கூட எடுத்துக்கொள்ள முடியாது. உயர்சாதியில் உள்ளவர்களை மேலும் அதிகாரத்தில் கொண்டுவருவதற்கான சட்டமாகதான் இருக்கிறது என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள். மேலும் இது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு அரசியலாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.  





Share:

ஆட்சியில் நீடிப்பாரா குமாரசாமி:


ஆட்சியில் நீடிப்பாரா குமாரசாமி:
திண்ணைல கெடந்தவனுக்கு திடீர்னு வந்துசாம்  கல்யாணம்-ங்குற மாறி வெறும் 37 சீட் வச்சுகிட்டு இரண்டு பெரிய தேசிய க
ட்சிக்கு தண்ணி காட்டி கடந்த வருடம் ஆட்சி அமைச்சாரு நம்ம குமாரசாமி .
கடந்த ஆண்டு கர்நாடக தேர்தலில் 80 சீட் காங்கிரஸ், 104 சீட் பி.ஜே.பி, 37 சீட் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் 3 சீட் சுயேச்சையும்  வெற்றி பெற்றது.காங்கிரசும் சம்மதத்தில்  குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. அதிக சீட் பெற்ற பி.ஜே.பி.யால் பெரும்பான்மை நிரூபிக்க முடியவில்லை.தற்போது நடந்து வரும் சூழல் என்னவென்றால் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்கள் குமாரசாமியை பதவி விலகுமாறு நிர்பந்திக்கிறார்கள் மேலும் காங்கிரசில் உள்ள மூத்த தலைவர் யாரையாவது முதலமைச்சர் பதவிக்கு நியமித்து விட்டு குமாரசாமியை துணைமுதல்மைச்சர் பதவியை ஏற்குமாறு காங்கிரஸ் கட்டளையிடுகிறது. அது மட்டுமல்லாமல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி கட்சிக்கு குறைந்த சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனால் கோபமடைந்த குமாரசாமி தன்னை மூன்றாம் தர குடிமகனை போல காங்கிரஸ் நடத்துகிறது என்று பேசியுள்ளார். குமாரசாமி பதவி விலகவில்லை என்றால் ஆட்சியை கலைத்துவிட்டு வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து  சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க நேரிடும் என்று   காங்கிரஸ் திட்ட வட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் குமாரசாமி பி.ஜே.பி.யோடு சேர்ந்து முதலமைச்சர் பதவியை தக்கவைத்து கொள்ள நினைக்கிறார். அனால் அவர் இல்லாமல் ஆட்சி அமைக்க பி.ஜே.பி குறுக்கு வழியை தேடிக்கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் காங்கிரசில் உள்ள வருகின்ற லோக் சபா தேர்தலுக்கு சீட் கிடைக்காத அதிருப்தி M.L.A. களை தன் பக்கம் இழுக்க பி.ஜே.பி அரசு முயற்சித்து வருகிறது.குமாரசாமி துணைமுதல்மைச்சர் பதவியையாவது தக்கவைத்து கொள்வாரா? இல்லை பி.ஜே.பியோடு கூட்டணி வைக்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
Share:

கொடநாடு கொலையின் பின்னனி:

கொடநாடு கொலையின் பின்னனி:

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவுற்கு பிறகு நடந்த பல்வேறு சம்பவங்கள் அவிழ்க்கப்படாத 
முடிச்சுகளாகவே தொடர்கிறது. அதைப்பபற்றி சிறிய தொகுப்பாக நாம் காணலாம்.
2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா இறக்கிறார். 2017 ஏப்ரல் மாதம் அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து திருடியுள்ளனர்.என்று குற்றச்சாட்டு போலீசார் தரப்பில் வைக்கப்படுகிறது. யார் திருடினார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் சிசிடிவி காமிரா வேலை செய்யவில்லை.
கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்து அங்கிருந்த விலையுயர்ந்த கடிகாரங்களை திருடினார்கள் என எப்ஐஆர் போடப்பட்டது. 
ஓரிரு மாதங்கள் கழித்து ஜெயலலிதா வின் கார் ஓட்டுநர் கனகராஜ் அவரது குடும்பத்தோடு கார் விபத்தில் மரணமடைகிறார்.பிறகு சில நாட்கள் கழித்து கொடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆபரேட்டர் இறந்துவிடுகிறார். 
திருடியவர்களில் ஒருவர் என சந்தேகிக்கப்படும் நபர் சயன் என்பவர் அவரது குடும்பத்தோடு ஓரிரு மாதங்கள் கழித்து காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் அவரது குடும்பம் மரித்துப்போனது.கடுமையான காயங்களுடன் சயன் உயிர்பிழைக்கிறார்.
 சயன் மற்றும் திருட்டில் இன்னொரு கூட்டாளியான கேரளாவை சேர்ந்த வலையார் மனோஜ் இருவரது பேட்டியைத்தான் இன்று டெல்லியில் தெகல்கா  பத்திரிகையாளர் மேத்திவ்ஸ் வெளியிட்டுள்ளார். சயன் கூறுகையில் எடப்பாடி தான் கொடநாடு பங்களாவில் உள்ள ஒரு சில ஆவணங்களை எடுத்து வருமாறு சொன்னார்.
கொடநாடு சம்பந்தமாக நடந்த தொடர்ச்சியான மரணங்கள் சந்தேகத்தை எழுப்புகிறது என்று தெகல்கா பத்திரிக்கை ஆசிரியர் மேத்திவ்ஸ் கூறியுள்ளார். இதில் முக்கிய குற்றவாளியாக எடப்பாடியாக இருக்கலாம்  இதை முறைப்படி விசாரிக்க வேண்டடும்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு என்னவென்றால்;

  •  24 மணி நேரமும் தடையில்லா மின்சார இணைப்பு உள்ள கொடநாடு பங்களாவில் அன்று மற்றும் கரண்ட் கட் ஆனது எப்படி? 
  • காவலாளி இறந்து கிடந்தபோது பங்களாவில் உள்ள 27 cctv கேமெராக்கள் இயங்கவில்லை ஏன்? 
  • பங்களாவில் விலையுயர்ந்த கடிகாரத்தை திருடர்கள் திருடவந்தார்கள் என்று சொன்னால் அங்கு நியமிக்கப்பட்ட போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 
என்று எதிர்கட்சி தரப்பில் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. மேலும் வெற்றிவேல் (அமமுக) கூறுகையில்.
அம்மா இருக்கும் காலத்தில்
பினாமி பேரில் சொத்துக்களை சேர்த்த அமைச்சர்களை நடவடிக்கை எடுத்தோடு மட்டுமல்லாமல் சொத்துக்களுடைய ஆவணங்களை பரிமுதல் செய்தார். அந்த ஆவணங்களை எடுப்பதற்கு சயனையும் மனோஜையும் அனுப்பியிருக்ககூடும். என்றார்.மேலும் நேர்மையான அதிகாரியை கொண்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுமா?..


Share:

R. ராசா நேர்காணல்

திருவாரூர் தேர்தலை எதிர்கொள்ளுமா தி.மு.க.?

                       



 சமீபத்தில் நடந்த நேர்காணலில்  R.ராசா கூறியதாவது. தி.மு.க. திருவாரூர் இடைதேர்தலை புறக்கணிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை முன்வைத்தார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு காஜா புயலில் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல. முதலில் நிவாரண உதவி முழுவதும் கொடுத்து முடியுங்கள்.அதற்கு அப்புறம் தேர்தல் தேதியை அறிவியுங்கள் என்றார். இரண்டாவது 18 தொகுதி காலியா உள்ள நிலையில் திருவாரூர் தேர்தலை மட்டும் முன்னெடுப்பதற்கான காரணம் என்ன? திருவாரூர் தேர்தலை நடத்துவதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு   சோதனை ஓட்டம் மூலமாக மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள மத்தியில் ஆளுகின்ற பா.ஜா.கா அரசு முடிவு எடுத்துள்ளது என்பது பாமரமக்கள் கூட புரிந்துகொள்வார்கள். இதில் முக்கியமாக விஷயம் என்னவென்றால் மற்றொரு தொகுதியான  திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் இறந்ததற்கு அதுவும் காலியாக இருக்கக்கூடிய நிலையில் திருவாரூரை மட்டும் முன்னெடுக்க காரணம் என்ன?. என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.. மேலும் தேர்தலை நிறுத்துவதற்கு கம்யுனிஸ்ட் தோழர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் கள்.     என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

இப்படியும் மனிதர்கள்:

இப்படியும் மனிதர்கள்:

சிந்தனை தெளிவு என்பது கற்றலின் வெளிப்பாடு மட்டுமல்ல அது இறையச்சத்தோடு சேர்ந்து வெளிப்படுவது. எம் சமகாலத்தில் ஒரு புதுமையான போக்கு மனிதர்களிடத்தில் காணப்படுகிறது. மார்க்க விஷயத்தில் குழப்பமான சிந்தனைகளை மக்கள் மத்தியில் கடத்தப்படுவதன் மூலம் தங்களை அறிவுஜீவிகளாக வெளிப்படுத்த நினைக்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சிறிதேனும் யோசிப்பதில்லை. இவ்வாறான போக்கு ஏகத்துவம் பேசுபவர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. அவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக செயல்படுகிறார்கள். இவர்களால் சமூகத்திற்கு எந்த பயனுமில்லை. மாறாக அவர்கள் குழப்பத்தை மட்டுமே  விளைவிக்கிறார்கள்.இவ்வாறான மக்கள் தங்களின் பலஹீனங்களை நியாயப்படுத்துவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறான்.  

இந்த விஷயத்தை புரிந்து கொள்ள நாம் வரலாற்றில் இருந்து படிப்பினை பெறுவது கடமையாயிற்று.

ஒரு ஸஹாபி நபி (ஸல்) அவர்ளிடம் வந்து, நபியே`என்னுடைய உள்ளத்தில் தோன்றும் சில விஷயங்கள் வெளிப்படுவதை விட்டும் நான் அஞ்சுகிறேன் என்றார்கள்.அதற்கு நபி (ஸல்) கூறினார்கள். இதுதான் ஈமானின் உச்ச நிலை என்றார்கள்.  

குழப்பமான சிந்தனைகளில் எப்படி கையாளுவது என்பது நபியின் பாசறையில் பயின்ற ஸஹாபாக்களுக்கு நன்றாக புரிந்துஇருந்தது.

இம்மாதிரியான சிந்தனைகள் சாதாரணமாக எல்லோரிடத்திலும் ஏற்படக்கூடியதே. அதனுடைய தாக்கம் நம் உள்ளத்தில் ஏற்படாதவாறு அல்லாஹ்விடத்தில் அதிகமாக துஆ செய்வது நல்லது. யாஅல்லாஹ் 
குழப்பமான சிந்தனையை விட்டும் குழப்பவாதிகளை விட்டும் எம்மை பாதுகாத்து அருள்புரிவாயாக ..ஆமீன். . 

Share:

Introduction

அன்புள்ள நண்பர்களே,
   
  அஸ்ஸாலாமு அலைக்கும்.(வரஹ்)
இந்த புதிய வலைதளத்ததினூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

தளத்தின் பெயர் கடையநல்லூரை மையமாக கொண்டதாக  இருந்தாலும் பொதுவான தளமாகவே செயல்படவுள்ளது.

அரசியல்,சமூகம்,அறிவியல்,இஸ்லாம்,

உலக விஷயம் போன்ற எல்லா செய்திகளையும் பதிவேற்ற உள்ளோம். ஆக்கப்பூர்வமான விஷயங்கள்,ஆரோக்கியமான விவாதங்கள் போன்றவை நம்மை மேலும் பண்படுத்தும் என நம்புகிறேன். ஆதலால் அனைவரும் ஆதரவு தந்து இறைவனிடத்தில் பிராத்திக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
வஸ்ஸலாம்
Share:

Popular

Blog Archive