வருகின்ற லோக்சபா தேர்தலில் களமிறங்குகிறார் பிரகாஷ்ராஜ்:
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஜனவரி 1 ம் தேதி அதிரடியாக அறிவித்துள்ளார். அவர் முதற்கட்டமாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். எந்த கட்சியுடனும் வைக்காமல் சுயேட்சையாக தேர்தலை சந்திக்க உள்ளார். கர்நாடகாவில் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் நன்றாக யோசித்து முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். இன்றைய மத்திய அரயை எதிர்த்து மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
பல மேடைகளில் பி.ஜே.பி அரசை எதிர்த்து கருத்து சுதந்திரத்திற்கு எதிரான போக்கை கண்டித்து மக்களுக்கான குரலாக ஒலித்துள்ளார். என்னை இயங்கவிடாமல் கோழைகள் தடுக்கிறார்கள் என்று சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். இரண்டு தேசிய கட்சிகளும் மக்களுக்கான கட்சியாக இயங்கவில்லை அதனால் காங்கிரஸிடமும் கூட்டணி இல்லை மேலும் தனித்து தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
- எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பி.ஜே.பி. பின்புலமாக செயல்பட்டிருக்க கூடும் மேலும் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டு மதவெறி அரசியலை முன்னிறுத்துகிறது என்றும் கடுமையான குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
- # citizenvoice in parliment என்ற hastag ஐ பயன்படுத்தி மதவெறி அரசியலை கண்டித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment