Think before you speak.Read before you think.

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

head

பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள்:

பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள்:

வருகின்ற மக்களவை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்து வந்துகொண்டிருக்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்தும் போட்டியிடும் இடங்கள் மற்றும் வேட்பாளர்கள் குறித்தும் எல்லா கட்சிகளிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க-பா.ம.க கூட்டணியில் போட்டியிடும் இடங்கள் குறித்து வெளியான.செய்தியை நாம் காணலாம்.

பா.ஜ.க 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க 22 தொகுதிகளிலும் பா.ம.க 7 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தது. இதில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

  • கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்
  • கோவை - சி.பி.ராதாகிருஷ்ணன்
  • திருப்பூர் - வானதி சீனிவாசன்
  • நெல்லை - நயினார் நாகேந்திரன்
  • திருச்சி - தமிழிசை

போன்றோர்கள் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதில் H.ராஜா விற்கு இடமில்லை என நெட்டிசன்கள் மீம்ஸ்-களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அ.தி.மு.க M.L.A வான கருணாஸ்,  தனியரசு, தமீமுன் அன்சாரி போன்றோர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்து உடன்பாடு இல்லை என்றும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் செய்தியாளர் சந்திப்பில் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share:

இலை, பூ, பழம் இணைந்தது. பழுக்குமா?

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை எல்லா கட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், முரளிதர்ராவ், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றோர் சென்னையில் நட்சத்திர விடுதியில் சந்தித்தனர். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி இறுதியான நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க 5 இடங்களில் களமிறங்குவதாக முடிவெடுத்துள்ளது.

பா.ம.க 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க 21 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தது. பா.ஜ.க போட்டியிடும் 5 இடங்களிலும் அ.தி.மு.க முழுமையான ஆதரவு தரும் எனவும் ஒ.பி.எஸ். கூறியுள்ளார். மேலும் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் பா.ம.க, அ.தி.மு.க விற்கு முழுமையான ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளோம். நாற்பதும் நமக்கே என்று பியூஸ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எதுவும் பேசவில்லை என தெரிகிறது. மோடியும், அமித்ஷாவும் விஜயகாந்த் பற்றி விசாரித்தார்கள் எனவும் தெரிவித்தார்.
Share:

தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியா..?




தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கியதுதான் தென்காசி பாராளுமன்ற தொகுதி இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட வாய்ப்பு.

தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம்லீக்  மதிமுக,விசிக ஆகிய கட்சிகளோடு பிரம்மாண்ட கூட்டணியே திமுக அமைந்திருக்கிறது இதர்க்கு போட்டியாக அதிமுக ஒரு வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. திமுகவின் பிரம்மாண்ட கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அனைத்து கருத்து கணிப்புகளிலும் குறிப்பாக பாஜக ஆதரவு பெற்ற தேசிய தொலைக்காட்சியிலும்  வெளியானது.
இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து 39 தகுதியும் காங்கிரஸ் கட்சிக் கூட்டணிக்கு போவதை தடுக்க பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருந்தது.

இன்று அதிமுக பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி உடன்பாடு செய்திருக்கிறது  பாமகவிற்கு ஏழு தொகுதியும்  ஒரு மாநிலங்களவை தொகுதியை  கொடுக்க அதிமுக உடன்பாடு செய்திருக்கிறது. இதுபோலவே பாஜகவிற்கும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதில் பாஜக சார்பாக தென் சென்னை, கோவை, ஈரோடு கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் தங்களுக்கு கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தென்காசி தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை அதிமுக சார்பில் வசந்தி முருகேசன்  வெற்றி பெற்றார் இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனினும் இத்தொகுதியில் கிருஷ்ணசாமிக்கு செல்வாக்கு இருக்கிறது அவர் 2004 ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகள்  பெற்றிருந்தார்.

அதிமுக தொண்டர்கள் தரப்பில் இங்கு TTV தினகரன் கை ஓங்கி இருப்பதால் அதிமுகவிற்கு செல்வாக்கு குறைந்தே காணப்படுகிறது. மேலும் பாஜக இத்தொகுதியை குறிவைத்து செயல்படுகிறது.  சமீப காலங்களில் நடந்த ரத யாத்திரை பிரச்சனை, விநாயகர் ஊர்வல பிரச்சனை, செங்கோட்டை கலவரம் போன்றவை எல்லாம் இத்தொகுதியில் நடந்தவை. இவையெல்லாம் பாஜகவிற்கு பயன்படும் என்று அக்கட்சி கருதுகிறது. மேலும் இங்கு பாஜகவைச்சார்ந்த எச்.ராஜா போன்றவர்களும் தொடர்ச்சியாக முகாமிட்டுத் தங்கி செயல்பட்டு வருகிறார். ஆகையால் இத்தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கபட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதை உறுதி படுத்தும் வகையில் இன்று புதியதலைமுறைக்கு பேட்டியளித்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ரமேஷ் அவர்கள் பாஜக தென்காசி தொகுதியை கேட்டிருப்பதாகவும் அதிமுகவும் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தென்காசி தொகுதியில் பாஜக அல்லது பாஜக சித்தாந்தத்தை தற்பொழுது முழுமையாக ஆதரித்து வரும் கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கு அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றே தெரிகிறது.

Share:

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி. அமித்ஷா சென்னை வருகை:

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி. அமித்ஷா சென்னை வருகை:

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க மூத்த தலைவர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார். கடந்த 14 ம் தேதி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் 25 தொகுதிகளில் அ.தி.மு.க வும் 15 தொகுதிகளில் பா.ஜ.க வும் என முடிவானது.

இதில் அ.தி.மு.க 3 தொகுதிகளை என்.ஆர் காங்கிரஸ் மற்றும் த.மா.க விற்கும் கொடுத்தது போக 22 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடுவதாக முடிவு எடுத்தது. பா.ஜ.க விற்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில் 7 தொகுதிகளை பா.ம.க விற்கு மற்றும் தே.மு.தி.க விற்கு கொடுத்தது போக 8 தொகுதிகளில் பா.ஜ.க நேரடியாக போட்டியிட போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையாக தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு அமித்ஷா இன்று சென்னையில் அ.தி.மு.க அமைச்சர்களை சந்திக்க உள்ளார். பேச்சுவார்த்தை முடிவில் தொகுதி பங்கீடு குறித்தும் போட்டியிடும் இடங்கள் குறித்தும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Share:

இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால்?

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ராணுவ அதிகாரிகளுக்கு எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கி விட்டதாக அறிவித்து இருக்கிறார். சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு அதிகமாக நடைபெற்று வருகிறது.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால் என்ன நடக்கும்? 

சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தால் இரு நாடுகளுக்குமே அது தற்கொலைக்கு சமம் என்ற வகையில் தன் கருத்தை பதிவு செய்திருந்தார். இக்கருத்து உண்மையாக கூட அமையலாம் ஏனென்றால் இரு நாடுகளின் அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் உச்சபட்சமாக நடத்தினால் அது தற்கொலைக்கு சமமாகிவிடும் ஆகையால் இப்படிப்பட்ட முடிவை இரு நாடுகளும் எடுக்காது என்றே பலராலும் கணிக்கப்படுகிறது.


எனினும் சிறிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அப்படி சிறிய அளவில் போர் நடந்தால் அதில் நிச்சயமாக இந்தியா வெற்றி பெரும் எனினும் பாதிப்பு இரு நாட்டவருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு வந்து சில மாதங்களே ஆகிறது இந்த அரசு குறிப்பிட்ட சில மாற்றங்களை அங்கு ஏற்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான மாற்றமாக சீக்கியர்களின் முக்கிய கோவிலான குருநானக் கோவிலை திறந்து இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய பக்தர்களை அக்கோயிலுக்குச் செல்ல அனுமதித்தது இதுபோன்ற சம்பவங்களால் இந்தியா பாகிஸ்தான் இடையே சமீபகாலமாக ஒரு பரஸ்பர உறவு நிலவிவந்தது.



ஆனால் இத்தாக்குதலுக்கு பின்னர் அந்த உறவு பாதிக்கப்பட்டிருக்கிறது இம்ரன் கான் தலைமையிலான புதிய பாகிஸ்தான் அரசு இந்தப் பிரச்சினையை எப்படி கையாளும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது இம்ரான் கானின் புதிய அரசு இந்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமா அல்லது கடந்தகால பாக்கிஸ்தான் அரசை போல செயல்படுமா அல்லது வேறு ஒரு புதிய முயற்சியை எடுக்கும் என்பதை போகப்போகத்தான் தெரியும்.







இதுபோன்ற பிரச்சனைகள் நடக்கக் காரணமாக அமையும் அடிப்படை காரணங்களை சரி செய்ய வேண்டும். நாம் ஒரு பகுதியும் நிலத்தை தக்க வைப்பதைவிட அப்பகுதி மக்களின் உள்ளத்தை தக்க வைப்பது தான் உண்மையான ஜனநாயகம். அடக்குமுறை மூலம் பிரச்சினைகளைத்  தீர்ப்பதைவிட காஷ்மீர மக்களின் உள்ளங்களை வென்றெடுக்க வேண்டும். இந்திய அரசு அவர்களுக்கு அழிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலமும் அவர்களது நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவது மூலமும் தான் அவர்கள் உள்ளங்களை வென்றெடுக்க முடியும். இதுவே காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவும்  இந்தியாவின் ஜனநாயக பெருமையை நிலைநாட்ட கூடியதாகவும் அமையும்.

Share:

மோடி - சந்திரபாபு நாயுடு மோதல்.

மோடி - சந்திரபாபு நாயுடு மோதல்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்வதற்காக மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். மிசோரம், கேரளம், தமிழ்நாடு ஆந்திரம் என சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.

நேற்று அவர் ஆந்திராவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.தனிநபர் விமர்சனமாக சந்திரபாபு நாயுடுவின் மகனை குறித்தும் குடும்ப அரசியல் ஆந்திராவில் நடைபெறுகிறது என்றும் பேசியுள்ளார்.

இதற்கு பதில்லளிக்கும் விதமாக சந்திரபாபு நாயுடு மோடி குறித்தும் அவருடைய மனைவி யசோதா பெண் இருக்கிறார்.யாருக்காவது தெரியுமா? என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பியும் மோடிக்கு குடும்ப அமைப்பு பற்றி எதுவும் தெரியாது என சரமாரியாக தாக்கியுள்ளார்.

மேலும் பிரதமரை வரவேற்பது மாநிலத்தில் ஆளக்கூடிய முதலமைச்சருக்கு மரபாகும். விமானநிலையத்தில் மோடியை வரவேற்க சந்திரபாபு நாயுடு மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share:

மாயாவதி கட்சி ஆளூர் ஷாநவாஸுக்கு விருது.

மாயாவதி கட்சி ஆளூர் ஷாநவாஸுக்கு விருது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு  பகுஜன் சமாஜ்வாதி கட்சி அம்பேத்கர் விருது வழங்கி உள்ளது.

ஒரு இஸ்லாமிய அமைப்பில் பத்திரிக்கை ஆசிரியராக தன் இளம் வயதை தொடங்கிய ஆளூர் ஷா நவாஸ் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசியும் எழுதியும் வருகிறார் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தொடர்ந்து ஒளித்து வருபவராக ஆளூர் ஷாநவாஸ் திகழ்கிறார். அதிலும் குறிப்பாக தலித் மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி தனது வாதங்களை முன்னிறுத்தி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வரும் ஆளூர் ஷாநவாஸ் ஒடுக்கப்பட்ட மக்களின் செல்வாக்கு மிகுந்தவராகவும் உருவாகி வருகிறார்.

இந்நிலையில் மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் பகுஜன் பண்பாட்டு சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது அதில் ஆளூர் ஷாநவாஸ்க்கு "பாபாசாகேப் அம்பேத்கர் போராளி" என்னும் விருது வழங்கி கௌரவித்திருக்கிறது இவ்விருது அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு வழங்கி  கௌரவித்திருக்கிறார்.

ஆரம்ப கால கட்டத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பில் தன் வாழ்வைத் தொடங்கிய ஆளூர் ஷாநவாஸ் தற்போது ஒரு தேசிய கட்சியின் விருதை பெறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் எனினும் தன்னை முன் நிறுத்துவதற்கு சில இஸ்லாமிய அமைப்புகளை அவர் புறக்கணிக்கிறார் என்ற விமர்சனமும் சமூகத்தில் நிலவுவது குறிப்பிடத்தக்கது
Share:

மம்தாவிற்கு குவியும் ஆதரவு:

சாரதாஸ் நிதி நிறுவன ஊழல் தொடர்பாக மாநில அரசின் துணை இல்லாமல் கமிஷனர் வீட்டிற்கு சென்று அத்துமீறி விசாரணை மேற்கொள்ளப்போவது மத்திய அரசின் சர்வாதிகார போக்காக அமைந்துள்ளது. இதனை எதிர்த்து மம்தா  தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடக்கவுள்ளது.

ஆதரவு:

மம்தாவின் தர்ணாவிற்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் , மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் கஷ்மீர முதல்வர் ஒமர் அப்துல்லா, பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் போன்றோர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை 4 மணியளவில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதாக முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள் பாஜ.க விற்கு மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.


Share:

மம்தா பானர்ஜி க்கு பா.ஜ.க அரசால் நெருக்கடி:

கொல்கத்தாவில் மத்திய மோடி அரசிற்கு எதிராக மம்தா தொடர்ந்து  தர்ணாவில் ஈடுபட்டுவருகிறார். சி.பி.ஐ க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்மதா பானர்ஜி க்கும் நடுவே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. சாரதாஸ் நிதி நிறுவன ஊழல் சம்பந்தமாக காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சி.பி.ஐ. அவரது வீட்டிற்கு சென்றது. அங்கிருந்த காவலர்கள் ஒத்துழைக்க மறுத்து சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கு தொடுத்துள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி ப.ஜ.க அரசு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் மம்தா தலைமையில் நடந்த பிரம்மாண்டமான எதிர்கட்சிகளின் கூட்டத்தை அடுத்து பா.ஜ.க வின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. அதனால் ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி திசைதிருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்று மம்தா பேட்டியளித்துள்ளார். மோடி அரசை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்ல தயார். இதனால் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வந்தாலும் பரவாயில்லை. மோடி அரசை வீழ்த்தியே தீருவேன்.  எங்களிடத்தில் மக்கள் ஆதரவு இருக்கிறது. என்று கோபமாக பேசியுள்ளார்.
Share:

பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது.

பாஜ.க. பிரமுகர் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக சென்னை மாநக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அகமதாபாத்திலிருந்து சென்னை வந்த கல்யாணராமனை சென்னை காவல் நிலையம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது.  காக்கைசித்தர் கல்யாணராமன் என்ற முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அவருடைய கருத்துக்கள் தொடர்ந்து இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல் மதவெறியை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இஸ்லாமிய மக்களின் வெறுப்பை தூண்டி மதகலவரத்தை ஏற்படுத்தும் விதமாக வன்முறையான பதிவுகள் இருப்பதால் தேசபாதுகாப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை பற்றி தொடர்ந்து தரங்கெட்ட வார்த்தைகளால் விமர்சனம் செய்வது மேலும் முகம்மது நபி அவர்களை விமர்சனம் செய்வது மேலும் பதட்டம் ஏற்படுத்தும வகையில் பதிவுகளை போடுவது இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இவர் ஏற்கெனவே RSS ன் ஊர்வலத்தின் போது சமூக பாதுகாப்பு அடிப்படையில் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சைபர் கிரைம் போலீஸ் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Share:

வேலை இல்லாதவர்களா? இனி உங்களுக்கு வேலை இல்லை:


சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு மாதந்தோறும் பொருளாதார உதவிகளை செய்து பொருளாதார சமநிலை உருவாக்க போவதாக கூறி இருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டியது தான் எனினும் இந்த தகவல்இந்தியாவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவது கடினம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது மோடி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் நான்கரை ஆண்டு காலத்திற்கு பின்பும் வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.


பெருநகரங்களில் அங்கும் இங்கும் வேலை தேடி சுற்றித் திரியும் பட்டதாரி இளைஞர்கள் இதற்கு சான்றாக உள்ளனர். பெருவாரியான அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு வரும் இச்சூழலில் அங்கு வேலை தேடி செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தொடக்கநிலை ஊதியமும் மிகக் குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இதனால் பொருளாதாரத்தில் மேலும் மேலும் பின்தங்கிய நிலையே சமீபத்திய இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மூழ்கும் கப்பல் என்று சித்தரித்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் உயர் பொறுப்பில் இருக்கும் உயர் துறை அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகிறார்கள். இதில் முக்கியமானது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் கவர்னர் உர்ஜித் பட்டேலின் ராஜினாமா. மேலும் சில நாட்களுக்கு முன்பு இந்திய புள்ளியியல்(Statistical) துறையின் உயர் அதிகாரிகள் P.C.மோகனன் R. V.மீனாட்சி ஆகியோரின் ராஜினாமா அந்தக் கூற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.


இவர்கள் ராஜினாமாவிற்கு பிறகு வேலைவாய்ப்பு பற்றிய மாதிரி புள்ளிவிவரத்தை மத்திய அரசு நெருக்கடி காரணமாக வெளியிட்டிருக்கிறது. அதில் 31 சதவீத கிராமப்புற மக்களுக்கும் 46 சதவீத நகர்ப்புற மக்களுக்கு வேலை இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் இந்தியாவில் வேலை தேடக்கூடிய இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது மிகக் கடினமான சவாலாக இனி வரப்போகிற காலங்களில் இருக்கப் போகிறது. இனி அடுத்து ஒரு மாற்று அரசாங்கம் மத்தியில் வந்தாலும் கூட இந்த பொருளாதார சிக்கலை நீக்கி வேலைவாய்ப்பினை உருவாக்குவது மிக சவாலான ஒரு செயலாகவும் நீண்ட கால அளவு எடுக்க கூடிய ஒரு செயலாகவும் அமைந்து விட்டது. இதனால் இனி வரக்கூடிய காலகட்டங்களில் பொருளாதார வறுமை நிலை ஏற்படக் கூடிய ஒரு சூழல் உருவாக இருக்கிறது.


இதன் காரணமாகவே காங்கிரஸ் தற்பொழுது இந்த அறிவிப்பை அறிவித்திருக்கிறது இந்த அறிவிப்பினால் பொருளாதார சிக்கலை ஓரளவு தடுக்க முடியும் என காங்கிரஸ் நம்புவதாக கருதப்படுகிறது
Share:

Popular