Think before you speak.Read before you think.

head

இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால்?

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ராணுவ அதிகாரிகளுக்கு எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கி விட்டதாக அறிவித்து இருக்கிறார். சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு அதிகமாக நடைபெற்று வருகிறது.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால் என்ன நடக்கும்? 

சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தால் இரு நாடுகளுக்குமே அது தற்கொலைக்கு சமம் என்ற வகையில் தன் கருத்தை பதிவு செய்திருந்தார். இக்கருத்து உண்மையாக கூட அமையலாம் ஏனென்றால் இரு நாடுகளின் அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் உச்சபட்சமாக நடத்தினால் அது தற்கொலைக்கு சமமாகிவிடும் ஆகையால் இப்படிப்பட்ட முடிவை இரு நாடுகளும் எடுக்காது என்றே பலராலும் கணிக்கப்படுகிறது.


எனினும் சிறிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அப்படி சிறிய அளவில் போர் நடந்தால் அதில் நிச்சயமாக இந்தியா வெற்றி பெரும் எனினும் பாதிப்பு இரு நாட்டவருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு வந்து சில மாதங்களே ஆகிறது இந்த அரசு குறிப்பிட்ட சில மாற்றங்களை அங்கு ஏற்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான மாற்றமாக சீக்கியர்களின் முக்கிய கோவிலான குருநானக் கோவிலை திறந்து இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய பக்தர்களை அக்கோயிலுக்குச் செல்ல அனுமதித்தது இதுபோன்ற சம்பவங்களால் இந்தியா பாகிஸ்தான் இடையே சமீபகாலமாக ஒரு பரஸ்பர உறவு நிலவிவந்தது.



ஆனால் இத்தாக்குதலுக்கு பின்னர் அந்த உறவு பாதிக்கப்பட்டிருக்கிறது இம்ரன் கான் தலைமையிலான புதிய பாகிஸ்தான் அரசு இந்தப் பிரச்சினையை எப்படி கையாளும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது இம்ரான் கானின் புதிய அரசு இந்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமா அல்லது கடந்தகால பாக்கிஸ்தான் அரசை போல செயல்படுமா அல்லது வேறு ஒரு புதிய முயற்சியை எடுக்கும் என்பதை போகப்போகத்தான் தெரியும்.







இதுபோன்ற பிரச்சனைகள் நடக்கக் காரணமாக அமையும் அடிப்படை காரணங்களை சரி செய்ய வேண்டும். நாம் ஒரு பகுதியும் நிலத்தை தக்க வைப்பதைவிட அப்பகுதி மக்களின் உள்ளத்தை தக்க வைப்பது தான் உண்மையான ஜனநாயகம். அடக்குமுறை மூலம் பிரச்சினைகளைத்  தீர்ப்பதைவிட காஷ்மீர மக்களின் உள்ளங்களை வென்றெடுக்க வேண்டும். இந்திய அரசு அவர்களுக்கு அழிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலமும் அவர்களது நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவது மூலமும் தான் அவர்கள் உள்ளங்களை வென்றெடுக்க முடியும். இதுவே காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவும்  இந்தியாவின் ஜனநாயக பெருமையை நிலைநாட்ட கூடியதாகவும் அமையும்.

Share:

No comments:

Post a Comment

Popular