மாயாவதி கட்சி ஆளூர் ஷாநவாஸுக்கு விருது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சி அம்பேத்கர் விருது வழங்கி உள்ளது.
ஒரு இஸ்லாமிய அமைப்பில் பத்திரிக்கை ஆசிரியராக தன் இளம் வயதை தொடங்கிய ஆளூர் ஷா நவாஸ் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசியும் எழுதியும் வருகிறார் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தொடர்ந்து ஒளித்து வருபவராக ஆளூர் ஷாநவாஸ் திகழ்கிறார். அதிலும் குறிப்பாக தலித் மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி தனது வாதங்களை முன்னிறுத்தி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வரும் ஆளூர் ஷாநவாஸ் ஒடுக்கப்பட்ட மக்களின் செல்வாக்கு மிகுந்தவராகவும் உருவாகி வருகிறார்.
இந்நிலையில் மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் பகுஜன் பண்பாட்டு சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது அதில் ஆளூர் ஷாநவாஸ்க்கு "பாபாசாகேப் அம்பேத்கர் போராளி" என்னும் விருது வழங்கி கௌரவித்திருக்கிறது இவ்விருது அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு வழங்கி கௌரவித்திருக்கிறார்.
ஆரம்ப கால கட்டத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பில் தன் வாழ்வைத் தொடங்கிய ஆளூர் ஷாநவாஸ் தற்போது ஒரு தேசிய கட்சியின் விருதை பெறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் எனினும் தன்னை முன் நிறுத்துவதற்கு சில இஸ்லாமிய அமைப்புகளை அவர் புறக்கணிக்கிறார் என்ற விமர்சனமும் சமூகத்தில் நிலவுவது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment