Think before you speak.Read before you think.

head

மம்தா பானர்ஜி க்கு பா.ஜ.க அரசால் நெருக்கடி:

கொல்கத்தாவில் மத்திய மோடி அரசிற்கு எதிராக மம்தா தொடர்ந்து  தர்ணாவில் ஈடுபட்டுவருகிறார். சி.பி.ஐ க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்மதா பானர்ஜி க்கும் நடுவே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. சாரதாஸ் நிதி நிறுவன ஊழல் சம்பந்தமாக காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சி.பி.ஐ. அவரது வீட்டிற்கு சென்றது. அங்கிருந்த காவலர்கள் ஒத்துழைக்க மறுத்து சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கு தொடுத்துள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி ப.ஜ.க அரசு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் மம்தா தலைமையில் நடந்த பிரம்மாண்டமான எதிர்கட்சிகளின் கூட்டத்தை அடுத்து பா.ஜ.க வின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. அதனால் ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி திசைதிருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்று மம்தா பேட்டியளித்துள்ளார். மோடி அரசை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்ல தயார். இதனால் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வந்தாலும் பரவாயில்லை. மோடி அரசை வீழ்த்தியே தீருவேன்.  எங்களிடத்தில் மக்கள் ஆதரவு இருக்கிறது. என்று கோபமாக பேசியுள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Popular