Think before you speak.Read before you think.

head

இலை, பூ, பழம் இணைந்தது. பழுக்குமா?

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை எல்லா கட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், முரளிதர்ராவ், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றோர் சென்னையில் நட்சத்திர விடுதியில் சந்தித்தனர். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி இறுதியான நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க 5 இடங்களில் களமிறங்குவதாக முடிவெடுத்துள்ளது.

பா.ம.க 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க 21 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தது. பா.ஜ.க போட்டியிடும் 5 இடங்களிலும் அ.தி.மு.க முழுமையான ஆதரவு தரும் எனவும் ஒ.பி.எஸ். கூறியுள்ளார். மேலும் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் பா.ம.க, அ.தி.மு.க விற்கு முழுமையான ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளோம். நாற்பதும் நமக்கே என்று பியூஸ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எதுவும் பேசவில்லை என தெரிகிறது. மோடியும், அமித்ஷாவும் விஜயகாந்த் பற்றி விசாரித்தார்கள் எனவும் தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment

Popular