Think before you speak.Read before you think.

head

12ம் வகுப்பு புதிய தமிழ் - (தமிழர் குடும்ப முறை)


1. தமிழர் குடும்ப முறை என்ற உரைநடையின் ஆசிரியர்? 
...
பக்தவச்சல பாரதி 


2. தமிழர் உணவு, தமிழர் மானுடவியல், தமிழகப் பழங்குடிகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?
  
...
பக்தவச்சல பாரதி


3. மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
...
குறுந்தொகை 


4. மறியிடைப்படுத்த மான்பிணை போல்" என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
...
ஐங்குறுநூறு 


5. கூடி வாழ்தல் என பொருள்படும் சொல் எது?
...
குடும்பு



6. இரவுக் குறியே இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழி அதுவே" என்ற வரிகள் இடம்பெறுவது?
...
தொல்காப்பிய நூற்பா

7.புறநானூற்றில் தற்காலிக தங்குமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
...
புக்கில்


8. இளம் தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது" எனக் கூறும் நூல் எது?
...
தொல்காப்பியம்


9. சிறுவர்தாயே பேரிற் பெண்டே" என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
...
புறநானூறு 

10. செம்முது பெண்டின் காதலஞ்சிரா அன்" என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
...
புறநானூறு  


11. "என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்" என்ற வரிகள் இடம்பெறுவது?
...
கலித்தொகை  


12. "வானரக் கூந்தல் முதியோள் சிறுவன்" என்ற வரிகள் இடம்பெறுவது?
...
புறநானூறு  

13. திருமணத்திற்கு பின் மனைவியின் இல்லத்திற்கு சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்தது எந்த நூல் மூலம் அறியவருகிறது?
...
அகநானூறு  


14. தாய்வழி சொத்துக்கள் பெண்களுக்கு போய் சேர்ந்தன என்பதை குறிக்கும் மருதத்திணை பாடல் இடம் பெறும் நூல்? 
...
குறுந்தொகை 


15. விரிந்த குடும்ப முறை பற்றி குறிப்பிடும் நூல் எது?
...
ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல்  




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive