Think before you speak.Read before you think.

head

தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியா..?




தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கியதுதான் தென்காசி பாராளுமன்ற தொகுதி இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட வாய்ப்பு.

தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம்லீக்  மதிமுக,விசிக ஆகிய கட்சிகளோடு பிரம்மாண்ட கூட்டணியே திமுக அமைந்திருக்கிறது இதர்க்கு போட்டியாக அதிமுக ஒரு வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. திமுகவின் பிரம்மாண்ட கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அனைத்து கருத்து கணிப்புகளிலும் குறிப்பாக பாஜக ஆதரவு பெற்ற தேசிய தொலைக்காட்சியிலும்  வெளியானது.
இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து 39 தகுதியும் காங்கிரஸ் கட்சிக் கூட்டணிக்கு போவதை தடுக்க பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருந்தது.

இன்று அதிமுக பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி உடன்பாடு செய்திருக்கிறது  பாமகவிற்கு ஏழு தொகுதியும்  ஒரு மாநிலங்களவை தொகுதியை  கொடுக்க அதிமுக உடன்பாடு செய்திருக்கிறது. இதுபோலவே பாஜகவிற்கும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதில் பாஜக சார்பாக தென் சென்னை, கோவை, ஈரோடு கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் தங்களுக்கு கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தென்காசி தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை அதிமுக சார்பில் வசந்தி முருகேசன்  வெற்றி பெற்றார் இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனினும் இத்தொகுதியில் கிருஷ்ணசாமிக்கு செல்வாக்கு இருக்கிறது அவர் 2004 ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகள்  பெற்றிருந்தார்.

அதிமுக தொண்டர்கள் தரப்பில் இங்கு TTV தினகரன் கை ஓங்கி இருப்பதால் அதிமுகவிற்கு செல்வாக்கு குறைந்தே காணப்படுகிறது. மேலும் பாஜக இத்தொகுதியை குறிவைத்து செயல்படுகிறது.  சமீப காலங்களில் நடந்த ரத யாத்திரை பிரச்சனை, விநாயகர் ஊர்வல பிரச்சனை, செங்கோட்டை கலவரம் போன்றவை எல்லாம் இத்தொகுதியில் நடந்தவை. இவையெல்லாம் பாஜகவிற்கு பயன்படும் என்று அக்கட்சி கருதுகிறது. மேலும் இங்கு பாஜகவைச்சார்ந்த எச்.ராஜா போன்றவர்களும் தொடர்ச்சியாக முகாமிட்டுத் தங்கி செயல்பட்டு வருகிறார். ஆகையால் இத்தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கபட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதை உறுதி படுத்தும் வகையில் இன்று புதியதலைமுறைக்கு பேட்டியளித்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ரமேஷ் அவர்கள் பாஜக தென்காசி தொகுதியை கேட்டிருப்பதாகவும் அதிமுகவும் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தென்காசி தொகுதியில் பாஜக அல்லது பாஜக சித்தாந்தத்தை தற்பொழுது முழுமையாக ஆதரித்து வரும் கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கு அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றே தெரிகிறது.

Share:

No comments:

Post a Comment

Popular