பாஜ.க. பிரமுகர் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக சென்னை மாநக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அகமதாபாத்திலிருந்து சென்னை வந்த கல்யாணராமனை சென்னை காவல் நிலையம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது. காக்கைசித்தர் கல்யாணராமன் என்ற முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அவருடைய கருத்துக்கள் தொடர்ந்து இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல் மதவெறியை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இஸ்லாமிய மக்களின் வெறுப்பை தூண்டி மதகலவரத்தை ஏற்படுத்தும் விதமாக வன்முறையான பதிவுகள் இருப்பதால் தேசபாதுகாப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை பற்றி தொடர்ந்து தரங்கெட்ட வார்த்தைகளால் விமர்சனம் செய்வது மேலும் முகம்மது நபி அவர்களை விமர்சனம் செய்வது மேலும் பதட்டம் ஏற்படுத்தும வகையில் பதிவுகளை போடுவது இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இவர் ஏற்கெனவே RSS ன் ஊர்வலத்தின் போது சமூக பாதுகாப்பு அடிப்படையில் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சைபர் கிரைம் போலீஸ் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
No comments:
Post a Comment