ஆட்சியில் நீடிப்பாரா குமாரசாமி:
திண்ணைல கெடந்தவனுக்கு திடீர்னு வந்துசாம் கல்யாணம்-ங்குற மாறி வெறும் 37 சீட் வச்சுகிட்டு இரண்டு பெரிய தேசிய க
கடந்த ஆண்டு கர்நாடக தேர்தலில் 80 சீட் காங்கிரஸ், 104 சீட் பி.ஜே.பி, 37 சீட் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் 3 சீட் சுயேச்சையும் வெற்றி பெற்றது.காங்கிரசும் சம்மதத்தில் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. அதிக சீட் பெற்ற பி.ஜே.பி.யால் பெரும்பான்மை நிரூபிக்க முடியவில்லை.தற்போது நடந்து வரும் சூழல் என்னவென்றால் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்கள் குமாரசாமியை பதவி விலகுமாறு நிர்பந்திக்கிறார்கள் மேலும் காங்கிரசில் உள்ள மூத்த தலைவர் யாரையாவது முதலமைச்சர் பதவிக்கு நியமித்து விட்டு குமாரசாமியை துணைமுதல்மைச்சர் பதவியை ஏற்குமாறு காங்கிரஸ் கட்டளையிடுகிறது. அது மட்டுமல்லாமல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி கட்சிக்கு குறைந்த சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனால் கோபமடைந்த குமாரசாமி தன்னை மூன்றாம் தர குடிமகனை போல காங்கிரஸ் நடத்துகிறது என்று பேசியுள்ளார். குமாரசாமி பதவி விலகவில்லை என்றால் ஆட்சியை கலைத்துவிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் திட்ட வட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் குமாரசாமி பி.ஜே.பி.யோடு சேர்ந்து முதலமைச்சர் பதவியை தக்கவைத்து கொள்ள நினைக்கிறார். அனால் அவர் இல்லாமல் ஆட்சி அமைக்க பி.ஜே.பி குறுக்கு வழியை தேடிக்கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் காங்கிரசில் உள்ள வருகின்ற லோக் சபா தேர்தலுக்கு சீட் கிடைக்காத அதிருப்தி M.L.A. களை தன் பக்கம் இழுக்க பி.ஜே.பி அரசு முயற்சித்து வருகிறது.குமாரசாமி துணைமுதல்மைச்சர் பதவியையாவது தக்கவைத்து கொள்வாரா? இல்லை பி.ஜே.பியோடு கூட்டணி வைக்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
No comments:
Post a Comment