Think before you speak.Read before you think.

head

நடிகர் அஜீத் ரசிகர்கள் பா.ஜ.க வில் சேர்கிறார்களா?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க நடிகர்களை வைத்து காய்நகர்த்தல் வேலையை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அஜீத் ரசிகர்கள் மோடியின் ரசிகர்களாக மாறிவிட்டார்கள் என்றும் மோடியின் திட்டத்தை அஜீத் ரசிகர்கள் தான் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று   தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சாவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் அஜீத் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

சினிமாதான் எனது தொழிலாக கொண்டுள்ளேன். நேரடியாகவோ மறைமுகமாகவோ நன் அரசியலுக்கு வரமாட்டேன்.என்பதை நன் ஏற்கெனவே கூறியுள்ளேன். என்னுடைய பெயரையோ படத்தையோ வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று அதிரடியாக கூறியுள்ளார். நான் நடிக்கும் படத்தில் கூட அரசியல் சாயம் வந்துவிட கூடாது என்று கவனமாக இருக்கக்கூடியவன் நான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். என்னையும் என் ரசிகர்களையும் தொடர்புபடுத்தி யாரும் இங்கு அரசியல் செய்ய வேண்டாம். எனக்கு அரசியலுக்கு வருவதற்கு துளி அளவு கூட விருப்பம் இல்லை. சாதாரண மனிதனாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு. எனக்கும் அரசியல் பற்றி தனிப்பட்ட கருது உண்டு அதை நான் யாரிடத்திலும் திணிப்பதில்லை அதேபோல் என்னிடத்திலும் யாரும் திணிக்கவேண்டாம். அதற்கு தான் சில வருடங்களுக்கு முன்பு ரசிகர் மன்றத்தையே கலைக்க சொன்னேன். நான் என் ரசிகர்களிடத்தி எதிர்பார்ப்பதெல்லாம் அன்பை மட்டுமே. வாழு வாழவிடு என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நடந்த ஐந்து மாநில தேர்தல் முடிவு பா.ஜ.க விற்கு மிக பெரிய தோல்வியை தந்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த தோல்வி தொடரக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அது ஆன்மீக அரசியல் என்று சொல்லி ரஜினியை வைத்து அரசியல் செய்ததாக இருந்தாலும் சரி .பின்பு ராமர் அரசியல் என்று கடவுளை வைத்து அரசியல் செய்ததாக இருந்தாலும் சரி. தற்போது 10% இடஓதுக்கீடு என்று உயர்சாதி இந்துக்களை கவர்வதற்காக இடஓதுக்கீடை வைத்து அரசியல் செய்கிறது.அதற்கு பின் நடிகர் அஜீத் வைத்து அரசியல் செய்கிறது. 

இது ஒருபக்கம் இருக்க பா.ஜ.க வை வீழ்த்துவதற்கு 23 கட்சிகள் பங்கேற்ற மிகப்பெரிய எதிர்கட்சிகள் கூட்டம் கொல்கத்தாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. வருகின்ற தேர்தல் பா.ஜ.க விற்கு மிக பெரிய சவுக்கடியாக விழும் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive