Think before you speak.Read before you think.

head

இந்து மதஉணர்வுகளை புண்படுத்துவதுதான் நோக்கமா?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக ப.ஜா.க. பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. உயர்சாதி இந்துக்களுடைய வாக்குகளைக் பெறுவதற்கு அவசர அவசரமாக 10% இடஓதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் அவர்களால் கடைவிரிக்க முடியவில்லை என்பதால் ராமர் அரசியல்,பிள்ளையார் அரசியல்,ரஜினி அரசியல் என்று பல அரசியல் செய்து பார்த்தது. ஒன்னும் பலிக்கவில்லை என்பதால் எதையாவது சொல்லி மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மத்தியில் மதத்தை வைத்து அரசியல் செய்ததை போல மாநிலத்திலும் மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது.அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் லயோலா காலேஜில்  நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சி விருது வழங்கும் விழாவில் இடம்பெற்ற ஓவியங்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை பரப்பி வருகிறது.மோடி அரசின் சாதனை,10% இடஓதுக்கீடு, ராஃபேல் ஊழல்,கார்ப்பரேட் ஊடுருவல் போன்ற பல்வேறு ஓவியங்கள் அங்கு இடம்பெற்றது.
மேலும் இந்துக்களின் மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் அங்கு சில ஓவியங்கள் இருந்தன. அதற்கு லயோலா காலேஜ் நிர்வாகமும் மன்னிப்பு கேட்டது.

இங்கு அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் மதஉணர்வுகளை புண்படுத்துவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது அதில் ஏந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் வர்ணாசிரம கொள்கையின்படி மனிதர்களிடத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தி சாதிய பிளவுகளை உண்டுபண்ணி அதில் அரசியல் ஆதாயம் அடையக்கூடியவர்கள் மதத்தின் பெயரால் ஒரு விஷயத்தை முன்னெடுக்கும் போது சாதாரண மக்களாகிய நாம் சரியான புரிதலோடு அணுகுவதுதான்  சிறந்ததாக இருக்கமுடியும். மதத்தின் பெயரால் எத்தனையோ கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றிருக்கிறது. மதத்தின் பெயரால் கோவில் கருவறையில் 8 வயது சிறுமிக்கு  நடந்த அந்த கொடூரம். சாதிய ஆதிக்கத்தால் நடந்த எத்தனையோ ஆணவ கொலைகள் இப்படி மதத்தின் பெயரால் பல துயரங்கள் அரங்கேறியுள்ளது. மதத்தை முன்னிலைப்படுத்தி வர்ணத்தின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் கடவுள்கள் நமக்கு தேவையா? அந்த ஓவியங்களும் சித்திரங்களும் இம்மாதிரியான கடவுள்களை தான் குறிக்கும் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுளோம்.   
Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive