Think before you speak.Read before you think.

head

ஓட்டு அரசியல் 10% இடஓதுக்கீடு:

ஓட்டு அரசியல் 10% இடஓதுக்கீடு:

 உயர்சாதி வகுப்பை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10% இடஓதுக்கீடு என்று சமீபத்தில் மாநிலங்களவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இது சமூக வலைதளங்களில் கடுமையான விவாதமாக மாறியுள்ளது.பொதுவாக அரசியல் சாசன சட்டப்படி  இடஓதுக்கீடு யாருக்கு பொருந்தும் என்றால் சாதிய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட  கல்வி மறுக்கப்பட்ட, அதிகாரத்தால் பின்தங்கியவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படுவது தான் இடஓதுக்கீடு. என்பது அரசியல் சாசன விதி. அனால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் என்பது அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது. இது உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகிவிடும் என தெரிந்தும்  இந்த சட்டத்தை  அவசரமாக நிறைவேற்ற காரணம் என்ன என்று பார்த்தால் கடந்த 5 மாநில தேர்தல் முடிவு பா.ஜ.க.விற்கு  மிகப்பெரிய பின்னடைவை தந்திருக்கிறது. அதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள  உயர்சாதி வகுப்பில் உள்ளவர்களுடைய வாக்குகளை கவர்வதற்காக இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. என்று திராவிட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்றால் அவர்களுக்கு தேவையான கடன் உதவி செய்யலாம். அதைவிட்டுவிட்டு இடஓதுக்கீடு என்று சொல்வது வத்தலகுண்டு போக வழி கேட்டல் கொட்டப்பாக்கு எட்டணா-னு சொன்னானா என்பது போல இருக்கிறது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மேலும் மேலும் அதிகாரம் கொடுப்பது என்பது எந்த வகையில் நியாயம். 

மேடும் பள்ளமும் இருந்தால் அதை சரிப்படுத்துவதற்கு மேட்டிலிருந்து மண்ணை வெட்டி பள்ளத்தில் போடவேண்டும். இல்லாவிட்டால் பள்ளத்தில் மண்ணை போட்டு மேடு வரை உயர்த்த வேண்டும்.இதுதான் நியாயமாக இருக்கும். அதைவிட்டுவிட்டு இரண்டு பக்கமும் சரிசமமாக மண்ணை போட்டால் மேடு மேடாகத்தான் இருக்கும் பள்ளம் பள்ளமாகதான் இருக்கும் என்று திராவிட கழகதில் உள்ள அருள்மொழி கூறியுள்ளார். இதில் இடதுசாரி காங்கிரசும் எந்த சலனமும் இல்லாமல் மத்திய அரசுக்கு துணை போவது எதை காட்டுகிறது என்றால் சாதிய ஆதிக்கம் காங்கிரசிலும் வேரூன்றி இருப்பது பட்டவெளிச்சமாக தெரிகிறது. 
மேலும் பொருளாதாரத்தில் ஆண்டு வருமானம் 8ட்சம் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த இடஓதுக்கீடு பொருந்தும் என்று சொல்கிறது. ஆண்டு வருமானம் 8 லட்சம் என்றால் மாதம் சராசரியாக 65 ஆயிரம் வாங்குபவர்கள் இவர்கள் பார்வையில் ஏழையாம்.  அப்படி பார்த்தால் இந்தியாவில் 90% மக்கள் ஏழைகளாகதான் இருக்கிறார்கள். ஆக அடிப்படையில் இவர்கள் சொல்லும் சட்டம் ஒரு வாதத்திற்காக கூட எடுத்துக்கொள்ள முடியாது. உயர்சாதியில் உள்ளவர்களை மேலும் அதிகாரத்தில் கொண்டுவருவதற்கான சட்டமாகதான் இருக்கிறது என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள். மேலும் இது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு அரசியலாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.  





Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive