Think before you speak.Read before you think.

head

மீண்டும் இந்திரா.......

மீண்டும் இந்திரா.......

நீண்ட நாட்களாக பிரியங்கா காந்திக்கு அரசியல் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி அவருக்கு உத்தரபிரதேச கிழக்கு மாகாண பொறுப்பாளர் பதவியை வழங்கியுள்ளது உத்தரப்பிரதேச கிழக்கு மாகாண பகுதி என்பது பாஜக மிக மிக வலிமையாக இருக்க கூடிய ஒரு பகுதியாகும் அத்தகையோர் பகுதியில் பிரியங்கா காந்தியை பொறுப்பாளராக நியமித்திருப்பது அவர் வலிமையான ஆளுமை என எதிர்பார்க்கப்பட்டு வழங்கப்பட்டது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 1972 ஜனவரி 12-ஆம் தேதி  சோனியாவுக்கும் ராஜீவ்காந்திக்கும் மகளாக பிறந்த பிரியங்கா காந்தி இந்திரா காந்தியின் தோற்றத்தைப் போலவே அமையப் பெற்று உள்ளார். அவர்  குணங்களும் இந்திராவை போல துணிச்சலாக வலிமையாக இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கருதுகிறார்கள். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் பஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்து களம் இறங்குகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் இதுவரை இடம்பெறவில்லை காங்கிரஸ் அங்கு தனித்து விடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதும் நிலையில் பிரியங்காவின் இந்த வருகை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே எட்டு பத்து சதவீத வாக்குகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் மேலும் வாக்குகளை பெறக்கூடியதாக இந்த முடிவு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆளும் பாஜகவுக்கு மட்டுமல்லாமல் எஸ்.பி, பி.எஸ்.பி ஆகிய கட்சிகளுக்கும் தன் பலத்தை நிரூபிக்க எடுக்கப்பட்ட முடிவாகவே தெரிகிறது இருப்பினும் சமீப காலமாக காங்கிரஸ் கட்சியை உத்தரபிரதேசத்தில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது அதில் இருந்து காங்கிரஸ் கட்சியை மாற்றி அமைத்து புத்துணர்ச்சி பாய்ச்சும் தலைவராகவே பிரியங்காவை காங்கிரஸ்காரர்கள் பார்க்கிறார்கள். பிரியங்கா காங்கிரஸின் உத்திரப்பிரதேச நீண்ட நாள் அரசியல் திட்டத்திற்காக பயன்படுத்த படுவார் என்று கருதப்படுகிறது எனினும் காங்கிரஸ் பெறக்கூடிய இந்த வாக்குகள் பாஜகவின் வாக்குகளைப் பிரிக்குமா? அல்லது மாநில கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்குமா? என்று தேர்தலுக்கு பிறகு தான் நமக்கு தெரியவரும். இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் எஸ்பி, பிஎஸ்பி ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டால் பாஜக 18 இடங்கள் மட்டுமே பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுவே எஸ்பி பிஎஸ்பி மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்பட்டால் 5 இடங்கள் மட்டுமே பாஜகவுக்கு கிடைக்கும் என்று அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதனால் இதற்குப் பின்பும் கூட மாநில கட்சிகளோடு இணைந்து காங்கிரஸ் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனினும்  பிரியங்காவின் இந்த வருகை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஒரு புத்துணர்ச்சி அளிப்பதாகவே தெரிகிறது.
Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive