
ஆனால் அபுதாபி football கவுன்சில் என்னும் அமைப்பு கத்தார் - ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான போட்டியின் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி ஐக்கிய அரபு அமீரக ரசிகர்களுக்கு மட்டுமே வழங்கியிருந்தது இதனால் அரங்கம் முழுவதும் ஐக்கிய அரபு அமீரக ரசிகர்களே இடம்பெற்றதாக கூறப்படுகிறது இந்த போட்டியில் கத்தார் அணி 4-0 என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வீழ்த்தியது இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்நாட்டின் ரசிகர்கள் கத்தார் அணியினர் மீது செருப்பு வாட்டர் பாட்டில் போன்றவற்றை வீசி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர் இதனால் மைதானத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது எனினும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது இந்தச் செயல் அந்நாட்டு ரசிகர்கள் மீது உலக அரங்கில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இதில் கத்தார் வெற்றி பெற்றதால் ஜப்பான் அணியை இறுதிச்சுற்றில் சந்தித்திருக்கிறது ஜப்பான் அணி ஏற்கனவே ஆசிய தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஈரானை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment