இதற்கு முக்கிய காரணம் மோடி கொடுத்த வாக்குறுதி 15 லட்சம், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, மோடியின் வெளிநாட்டு பயணம், நீட் தேர்வு இதனால்தான் மக்களின் வெறுப்புணர்வை மோடி அரசு சம்பாதித்தது என்று குற்றம் சாட்டுகின்றனர். மோடி பதவியேற்ற நாளிலிருந்து தம் சொந்த கட்சியில் தமக்கு யார் யாரெல்லாம் எதிர்காலத்தில் இடையூறாக இருப்பார்களோ அவர்களை ஓரம்கட்டினார். இவரால் ஓரம்கட்டப்பட்டவர்கள் தான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நிதின் கட்காரி போன்றவர்கள். இன்று அவர்கள் மோடிக்கு மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டார்கள்.
2014 ல் ப.ஜா.க ஆட்சி அமைத்த மூன்றாவது ஆண்டிலிருந்தே மோடி எதிர்ப்பு ஆரம்பித்துவிட்டது. தற்போது மூத்த தலைவர்களில் ஒருவரான நிதின் கட்காரியை பிரதம வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ப.ஜா.க விற்கு உள்ளேயே குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன.
RSS ன் தலைவரான மோகன் பகவத்திற்கும் மோடிக்கும் மிகப்பெரிய பனிப்போர் நடைபெற்று கொண்டிருகிறது. இதனால் அவரும் மோடிக்கு எதிரான மனநிலையிலதான் உள்ளார். இந்நிலையில் ப.ஜா.க வின் கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய சிவசேனா மோடியை பிரதம வேட்பாளராக அறிவித்தால் கூட்டணியை விட்டு விலகுவதாக ப.ஜா.க விற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. மேலும் உத்தரபிரதேச முதல்வராக இருக்கக்கூடிய யோகி ஆதித்யநாத்தை பிரதம வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த தேர்தலில் மோடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நான் கூட்டணியில் இருக்கமாட்டேன் என்று விலகிய நிதிஷ் குமார் தற்போது ப.ஜா.க வில் இருந்தாலும் அவர் தன்னை பிரதம வேட்பாளராக முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருக்கத்தான் செய்கிறது. இதனால் ப.ஜா.க வால் இம்முறை மோடி முன்னிலைப்படுத்தபடுவது மிகப்பெரிய கேள்வி குறியாகவே இருக்கிறது.
தற்போது ப.ஜா.க விற்கு உள்ளேயே 3 பிரதம வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இந்த முறை மோடி வருவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதை மோடி சமாளிப்பாரா?
No comments:
Post a Comment