ஜெயிப்பாரா? திருமா. சிதம்பரத்தில் நிலவும் கடுமையான போட்டி:
சிதம்பரம் தொகுதியில் வண்ணிய சமூகம், தலித் சமூகம், இஸ்லாமிய சமூகம் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இங்கு 16 முறை தேர்தல் நடந்துள்ளது. இங்கு ஒரே ஒருமுறை தான் வி.சி.க. வெற்றிபெற்றுள்ளது. ஆனால் 3 முறை பா.ம.க. வெற்றிபெற்றுள்ளது. 6 முறை காங்கிரஸ், 4 முறை தி.மு.க, 2 முறை அ.தி.மு.க, வெற்றி பெற்றுள்ளது. பா.ம.க அதிருப்தியாளர்கள் மற்றும் காடு வெட்டி குரு ஆதரவாளர்கள் ஓட்டு முழுவதும் திருமா விற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் 3 முறை வெற்றி பெற்ற பா.ம.க.வால் களம் காணமுடியவில்லை. அதுமட்டுமல்லாமல் வேல்முருகன் ஆதரவு இருப்பதால் வண்ணிய சமூக ஓட்டு கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பா.ம.க பின்வாங்கியதால் அ.தி.மு.க சார்பாக சந்திரசேகர் என்பவர் நிற்கிறார். இவர் பெரிய அளவு அறிமுகம் இல்லாதவர் என்பதால் திருமா விற்கு வெற்றிவாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. தற்போது உள்ள அ.தி.மு.க MP தொகுதிக்கு எந்த நல்லதும் செய்யவில்லை என்ற அதிருப்தியும் இருக்கிறது. அதனால் அ.தி.மு.க வெற்றி பெறுவது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது.
இதே நிலையில் அ.தி.மு.க அதிருப்தியாளர்கள் அ.ம.மு.க விற்கு நகர்வதால் ஓட்டு கணிசமாக பிரியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. SDPI அ.ம.மு.க வுடன் கூட்டணி வைத்திருப்பதால் இஸ்லாமியர்களில் முழுமையான ஓட்டும் திருமாவிற்கு கிடைக்கும் என்றும் சொல்லமுடியாது. எனவே சிதம்பரத்தில் கடுமையான போட்டி நிலவிவருகிறது.
No comments:
Post a Comment