Think before you speak.Read before you think.

head

அமெரிக்காவில் நேற்று மட்டும் 562 பேர் இறப்பு

அமெரிக்கா,இத்தாலி, பிரான்ஸ், போன்ற நாடுகளில் கோரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது அதே வேளையில் சீனாவில் பாதிப்பின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

மொத்தம் 204 நாடுகளில் கோரோனோவால் பாதித்தவர்கள் 11 லட்சத்தை  கடந்து செல்கிறது இறப்பு எண்ணிக்கை 60 ஆயிரம் ஆகவும் நேற்று மட்டும் அமெரிக்காவில் 562 பேர் இறந்துள்ளது கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது,அமெரிக்காவில் மட்டும் 2.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் உலக பொருளாதாரமே சரியும் அபாயமும் இருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.


இறப்பு எண்ணிக்கை:
  • இத்தாலி - 14681
  • ஸ்பெயின் - 11744
  • அமெரிக்கா - 7403
  • பிரான்ஸ் -6507
  • ஈரான் - 3452
  • சீனா - 3326
இந்த வைரஸை குணப்படுத்த மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்சானிகளும்  மருத்துவர்களும் கடுமையான முயற்சி எடுத்து வருகின்றனர்

இக்கொடிய நோயை வெல்வதற்கு நாம் நம்மை தனிமை படுத்தி கொள்வதே இதற்கு தற்போதைய நிவாரணம் ஆகும்.நாம் முடிந்தவரையில் இது சம்பந்தமாக குடுபத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு சொல்வதை செவிமடுக்க வேண்டும்.




Share:

No comments:

Post a Comment

Popular