Think before you speak.Read before you think.

head

மதம் மாறிய கொரோனா: உண்மையில் நடந்தது என்ன?

உலக வரலாற்றிலேயே ஒரு கிருமி இஸ்லாமிய மதத்தை தழுவியது இதுதான் முதல் முறை என்று சமூக தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வரும் வேளையில் உண்மையில் நடந்தது என்ன என்பதை நாம் அலசுவோம்

கடந்த மார்ச் 20 ம் தேதி இஸ்லாமிய அமைப்பான தப்லிக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடந்தது.அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் என்பது உண்மை. அங்கு கூடிய சில நபர்களுக்கு கோரோனோ அறிகுறி இருந்ததாகவும் அவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள் இதனால் இந்தியாவில் ஒரு கோரோனோ ஜிஹாதை முன்னெடுக்கிறார்கள் என்று பல மத துவேஷ கருத்துக்களை நாம் வலைத்தளங்களில் காண்கிறோம்..உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிவோம் வாருங்கள்


இந்தியாவை பொறுத்தவரை மதவாத அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தி தனிமைப்படுத்தும் நிகழ்வு சமீப காலமாக பரவி வருவதை பார்க்கிறோம்..அது லவ் ஜிஹாத் என்றும் லேண்ட் ஜிஹாத் என்றும் இன்னும் இஸ்லாமோபோபியா என்றும் அச்சுறுத்தி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த துவேஷ சக்திகள் செய்து வருகின்றனர்..அவர்களை நோக்கி நாம் எழுப்பும் கேள்வி என்னவென்றால்....


  • இந்தியா மதச்சார்பற்ற நாடக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
  • இந்த கோரோனோ ஊரடங்கு அறிவித்த பின்பு அந்த மக்கள் கூடினார்களா?  இல்லை அதற்கு முன்பே கூடினார்களா?
  • பொருளாதார சரிவை திசை திருப்ப கோரோனோ உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததை போல கிருமிக்கு மதச்சாயம் பூசுவதன் மூலமாக இதுவும் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்குறீர்களா?
  • தேசிய மக்கள் பதிவேட்டை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்காக முஸ்லிம்களின் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்கிறீர்களா?
  • எல்லா நாடுகளும் கிருமிக்கு மருந்து கண்டுபிடிக்க முயலும் பொது நீங்கள் மதத்தை கண்டுபிடிக்கிறீர்களே இது தான் உங்கள் சித்தாந்தமா?

மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை செய்து கொண்டிருக்கிறார்கள்,இவர்களிடத்திலிருந்து மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ஏனென்றால் இவர்கள் இந்த கிருமியை விட மோசமானவர்கள்.






Share:

No comments:

Post a Comment

Popular