Think before you speak.Read before you think.

head

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் புலி

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சமீபத்தில் உறுதியானது. அமெரிக்காவில் 3 லட்சத்தையும் தாண்டி கரோனா வைரஸ் பாதிப்பு உக்கிரத்தை தொட்டிருக்கிறது. அதே போல் இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது மேலும் நியூயார்க் நகரத்தில் பாதிப்பு கடுமையாக உள்ளது

இந்நிலையில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் "நாடியா" என்ற புலிக்குட்டிக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக அந்த புலிக்குட்டிக்கு வறட்டு இருமல் இருந்ததாக காப்பாளர்கள் சொல்கின்றனர். நாடியாவை தொடர்து இன்னும் 3 புலிக்குட்டிக்கு சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர்.


பொதுவாக கரோனா வைரஸ் பாதிப்பு மனிதர்களுக்கு வருகின்ற வேளையில் இது ஒரு புலிக்குட்டிக்கு வந்திருப்பது வியப்பளிக்கிறது.
விலங்குகளுக்கு பரவும் இந்த வகை கொரோனா தன்னுடைய பரிணாமத்தை மாற்றி அவதாரம் எடுத்திருக்கலாம் என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

இப்போது நாடியா வின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும்  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த கொரோனா விலங்கு காப்பாளரிடம் இருந்து அந்த புலிக்குட்டிக்கு பரவி இருக்கலாம் என்றும் கூடுதல் தகவல் தெரிவிக்கின்றனர்  
Share:

No comments:

Post a Comment

Popular