Think before you speak.Read before you think.

head

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்திய மண்ணை சாதிக்கை தொடர்ந்து மாரிதாஸ் மீதும் வழக்குபதிவு




சமூக வலைத்தளங்கள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் தங்களை பிரபல படுத்திக் கொள்ள பலரும் பல விதமான முயற்சிகளை  செய்து வருகிறார்கள். இதில் சிலர் எல்லையை மீறி சட்ட விரோத செயலில்  ஈடுபடுவதால் காவல்துறையால் கைது செய்து  நண்கு கவனிக்கப்பட்டு வருகிறார்கள்.



டிக் டாக் பிரபலமான கண்ணன் என்பவன் பெண்களை  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதியாமல் இருக்க பணம் பெற்றுள்ளான் இது தொடர்பாக அவன் மீது புகார் அளிக்கப்பட்டதனால் காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைத்தது. இதேபோல மன்னை சாதிக்  என்பவன் தெலுங்கானா மாநில ஆளுநரை தவறாக சித்தரித்து புகைப்படத்தினை வெளியிட்டதால் அவன் மீதும் புகார்  எழுந்தது இதனைத் தொடர்ந்து காவல்துறை அவனையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இதேபோல சமூக வலைதளங்களில் தன்னை பிரபல படுத்திக்கொள்ள மாரிதாஸ் என்பவன் வாட்ஸப்பில் வரும் போலி தகவலை  யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் உளறிக் கொண்டிருந்தான். இவனது உளறலின் உச்சமாக திருநெல்வேலி  மாவட்டத்தை சார்ந்த  சர்ச்சைக்குரிய போலி பதிவை பதிவிட்டு இருந்தான். இதனை அறிந்த திருநெல்வேலி மாவட்ட மக்கள் அவனுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்தனர் காவல்துறை உரிய விசாரணை நடத்தி அவன் மீது பிணையில் வர முடியாத நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளது.  திறமை இருந்தாலே பிரபலம் அடைய முடியும், ஆனால்  பிரபலமடைய  இதுபோன்று சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் சிறைக் கம்பிகளை எண்ணி களி தின்ன வேண்டியதுதான்.
Share:

No comments:

Post a Comment

Popular