கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக டெல்லி ஜாமியா மில்லியா, அலிகர் பல்கலைக்கழகம் மற்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற கல்லூரிகளில் மாணவர் போராட்டம் வலுப்பெற்றிருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான அசாம் மேற்குவங்கம் பகுதிகளில் பொதுமக்கள் மாநில அரசுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு:
குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டதின் அடிப்படையை அடித்து நொறுக்கி இருக்கிறது. இது அரசியலமைப்பு விதி 15- மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதை மீறி மத்திய அரசு இந்த சட்டதை இயற்றி இருக்கிறது. இதன் மூலம் இஸ்லாமியர்களை தனிமை படுத்தும் அரசாக மத்திய அரசின் வெளிப்பட்டிருக்கிறது.
இறப்பு எண்ணிக்கை 20:
இந்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் இறப்பு எண்ணிக்கை 20 கும் மேல் என செய்தி தாள்களில் குறிப்பிடுகின்றன. இது இந்திய அரசின் இறையாண்மை மேல் அழுக்கு படிந்த கறையாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படும். மத்திய அரசின் தன்னிசையான போக்கு நாளை இந்தியாவையே பிளக்கும் அபாயத்தை நோக்கி இழுத்து செல்லும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது
No comments:
Post a Comment